

புதுடெல்லி
அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவின்படி, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவது தொடர் பாக 63 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ் பாலோ கூட்டினோ மற்றும் மரியா லூசியா வாலன்டினா பெரீரா இடையிலான சிவில் (சொத்து தகராறு) வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் களுக்கு நாட்டின் பிற பகுதி களில் உள்ள சொத்துக்கு, போர்ச்சு கீசிய சிவில் சட்டம், 1867-ன் படி யும் இந்திய அரசமைப்பு சட்டத் தின்படியும் சம்பந்தப்பட்டவர்களு டைய வாரிசுகள் உரிமை கொண் டாட முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சுதந்திரத்துக்கு முன்பு கோவா போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப் பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பின் ஒரு அங்கமாக நீதிபதி குப்தா கூறும்போது, “பொது சிவில் சட்டத்துக்கு கோவா உதாரண மாக விளங்குகிறது. போர்ச்சுகீசிய பொது சிவில் சட்டத்தின்படி, மத பாகுபாடின்றி அங்குள்ள அனைத்து மதத்தினரும் திருமணத்தை பதிவு செய்கின்றனர். இதன்படி முல்லிம்கள் பலதார மணம் புரிய முடியாது. இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறவர்கள் முத்தலாக் கூறி விவகாரத்து செய்ய முடியாத நிலை ஏற்கெனவே அமலில் இருந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், பொது சிவில் சட்டத்தை உருவாக் கலாம் என 44-வது பிரிவில் கூறி யுள்ளனர். இதுபோல, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டி யதன் அவசியத்தை உச்ச நீதிமன்ற மும் (ஷா பானு, சரளா முத்கல் வழக்குகளில்) ஏற்கெனவே வலி யுறுத்தி உள்ளது.
இந்து சட்டங்கள் 1956-ல் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டம் இயற்றப்பட்டு 63 ஆண்டு கள் முடிந்த நிலையிலும் பொது சிவில் சட்டத்தை இயற்ற இது வரை எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை” என்றார்.
முத்தலாக் தடை சட்டம், காஷ் மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட தங்கள் வாக்குறுதிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்கெனவே நிறைவேற்றி உள்ளது. இதுபோல பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதும் பாஜகவின் முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து அமைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.