Published : 15 Sep 2019 08:51 AM
Last Updated : 15 Sep 2019 08:51 AM

பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஏற்றுமதி, கட்டுமான துறைக்கு ரூ.70,000 கோடி: சலுகைகளை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

புதுடெல்லி

இந்தியா மிகக் கடுமையான பொரு ளாதார சரிவை எதிர்கொண்டு வரு கிறது. பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் புதிய சலுகை திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீட்டு திட்டத்தை அவர் அறிவித்தார். இது தவிர, கட்டுமானத் துறை வளர்ச்சிக்காக ரூ.20,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

‘‘பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக் காக ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்நிய நேரடி முதலீடு புத்துயிர் பெற்று வருகிறது. தொழில் துறை யின் வளர்ச்சிக்கான அறிகுறி தெளிவாக தெரிகிறது’’ என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீத மாக சரிந்துள்ளது. மக்களின் நுகர்வு மோசமான அளவில் குறைந்துள் ளது. இதனால் உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விற்பனை குறைவால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின் றன. வேலைவாய்ப்பின்மை அதி கரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்ற மாதம் சில சலுகை திட்டங் களை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் நேற்று டெல்லி யில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ஏற்றுமதித் துறை, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சார்ந்து மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

‘‘வரி மதிப்பீட்டு பணிகள் முழுவ தும் தொழில் நுட்பமயமாக்கப்படும். மனித செயல்பாடுகள் இன்றி கம்ப்யூட்டர் மூலமாகவே வரி மதிப்பீடு மேற்கொள்ளப்படும். சாதாரண வரி குற்றங்களுக்காக வரி செலுத்துபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது’’ என்று அவர் கூறினார். வரி விதிப்பு முறை களில் அரசு கடும் கட்டுப்பாட்டை மேற்கொண்டு வருவதாக விமர்சிக் கப்பட்டது.

இந்நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வங்கிகளைப் பொருத்தவரை, வங்கி நடைமுறைகள் அனைத்தும் மின்னணு மயமாக்கப்படும். சென்ற முறை அறிவிக்கப்பட்ட திட்டங்க ளால் வங்கி சாரா நிதி நிறுவனங் களில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீதம் அளவில் சரிந்துள்ளது. இந்நிலையில் ஏற்று மதியை ஊக்குவிக்கும் விதமாக சில திட்டங்களை அமைச்சர் அறிவித் தார். ‘‘ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்படும். குறிப்பாக ஜவுளிப் பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும். இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும்’’ என்று அவர் தெரிவித்தார். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான காப்பீட்டு வீதம் உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான ஏற்றுமதி கடன் உயர்த்தப்பட்டுள்ளது. அதற் கென்று கூடுதலாக ரூ.36,000 கோடி வழங்கப்படும். ஏற்றுமதியை ஊக்கு விக்கும்விதமாக மொத்தமாக ரூ.50 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் ரிசர்வ் வங்கி முறையாக தொடர்ந்து வெளியிடும். ஏற்றுமதி தொடர்பான நிதிக் கணக்குகள் அமைச்சர்களிடையே குழு அமைக்கப்பட்டு வார இடை வெளி அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.

‘‘சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வித மாக ஆண்டுதோறும் விற்பனைத் திருவிழா நடத்தப்படும். இது போன்ற விற்பனைத் திருவிழாக்கள் மூலம் கைவினைப் பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி, தோல் தயாரிப்பு ஆகிய துறைகள் மேம்படும்’’ என்று தெரிவித்தார். கைவினை தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில், கைவினை கலைஞர்கள் இணைய வர்த்தக முறையை பயன்படுத்தும் விதமாக பதிவுமுறையை அறிவித்துள்ளார்.

வாகனத் துறை போலவே ரியல் எஸ்டேட் துறையும் கடுமை யான சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் அவற்றை ஊக்கு விக்கும் விதமாக சில திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். தற் போதைய நெருக்கடிச் சூழலினால் பாதியில் விடப்பட்ட கட்டுமானங் களை, குறிப்பாக வாங்கத்தக்க அளவிலான வீட்டு கட்டுமான திட் டங்களை தொடர்வதற்காக கடன் உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி அளவில் நிதி அளிக்கப்பட உள்ளது. அரசு சார்பாக ரூ.10 ஆயிரம் கோடியும், பொதுத் துறை நிறுவனங் கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடியும் வழங்கப்படும். அரசுப் பணியாளர் கள் வீடுகள் வாங்கத்தக்க வகையில் வெளி வணிக கடன் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வங்கியின் கடன் செயல்பாடுகள் தொடர்பாக வரும் செப்.19 அன்று பொதுத்துறை வங்கித் தலைவர் களுடன் ஆலோசனை நடத்த இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x