Published : 14 Sep 2019 09:28 PM
Last Updated : 14 Sep 2019 09:28 PM

அபராதம் அல்ல... ஹெல்மெட், ஆவணங்களை அளிக்கும் தெலங்கானா போலீஸார்: குவியும் பாராட்டு

பிரதிநிதித்துவ படம்.

ஹைதராபாத், ஐஏஎன்எஸ்

புதிய மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் போக்குவரத்து விதிமீறுவோருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு நாட்டின் சில பகுதிகளில் மக்கள் அவதிகளை சந்தித்துவரும் நிலையில் தெலங்கானா போலீஸ் விழிப்புணர்வு மாதிரியில் விதிமீறல் வாகனதாரிகளுக்கு அபராதங்களுக்குப் பதிலாக ஹெல்மெட், ஆவணங்களை அளித்து வருகிறது.

கிரேட்டர் ஹைதராபாத்தின் ரச்சகொண்டா பொலீஸ் ஆணையர் அலுவலகம் புதிய முறையைக் கையாள்கிறது. விதிமீறல் செய்வோருக்கு ஹெல்மெட் வாங்குவதற்கும் ஆவணங்கள் இல்லாமல் வருவோருக்கு ஆவணங்களைப் பெற்றுத்தருவதற்கும் வசதிகள் செய்து கொடுத்து நாட்டிற்கு ஒரு பாடமாக விளங்குகிறது.

இதற்கான நடைமுறையை சனிக்கிழமையன்று போக்குவரத்து போலீஸ் உதவி ஆணையர் திவ்யா சரண் ராவ் அறிமுகம் செய்தார்.

போக்குவரத்து விதிமீறல் செய்வோர் அந்த இடத்திலேயே ஹெல்மெட் வாங்குவதற்கும் மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் காப்பீடு ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அதனைப்பெற்றுத் தர வசதிகளையும் தெலங்கானா போலீஸ் செய்து தந்து புதிய முறையை கையாண்டு வருகிறது.

லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு ஆன்லைனின் புக்கிங் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மீறல்களை நிறுத்த அபராதங்கள் உதவாது, இத்தகைய நடவடிக்கைகளே உதவும் என்று நெட்டிசன்களும், தெலங்கானா மக்களும் பாராட்டித் தள்ளுகின்றனர்.

இந்த புதிய உத்தியை தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பாராட்டி ஊக்குவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x