Published : 14 Sep 2019 06:58 PM
Last Updated : 14 Sep 2019 06:58 PM

செப்டம்பரில் 868 மில்லிமீட்டர் மழை: மொத்த அளவு 3422 மில்லி மீட்டர்: மும்பையின் துயரமான மழை

புவனேஸ்வர்,

மும்பையில் பெய்து வரும் மழையை அளவிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த பல பத்தாண்டுகளாக இல்லாதஅளவுக்கு இந்த செப்டம்பரில் மட்டும் 868 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் திவிரமாகி வருவதைத் தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் மழை தொடங்கினாலும் ஜூலை மாதத்தில் மும்பையில் கனமழை பெய்தது காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு ஆகஸ்ட், செப்டம்பர் என இன்றுவரை மும்பை மக்கள் நிம்மதியைத் தொலைத்துவருகின்றனர்.

கடந்த பல பத்தாண்டுகளாக இல்லாத அளவுக்கு ஜூன் தொடங்கிய இந்த காலாண்டின் தென்மேற்குப் பருவமைழை மும்பை நகரத்தை பதம் பார்த்துவிட்டு சென்றிருக்கிறது. மக்களுக்கு தேவையான அளவுக்கு என்றில்லாமல், விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கங்கே வெள்ளம் சூழ்ந்து அவர்களது இயல்புவாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ள இந்த மழை இன்னும் நின்றபாடில்லை என்பதுதான் பிரச்சினை.

மும்பையில் இந்த வாரம் பெய்துகொண்டிருக்கும் மழையின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் மின்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் மிகப்பெரிய அளவில் 868 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இன்னும் மழை தொடர்வதால் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கடந்த நூற்றாண்டிலேயே அதிக அளவு மழைபொழிவான 920 மிமீ அளவை மீற வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஆய்வு மையம் கூறியுள்ளது.

மும்பை மழை அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நீதா கூறியுள்ளதாவது:

இந்த செப்டம்பரில் பெய்துள்ள மழையின் அளவு 868 மி.மீ என்பது செப்டம்பர் 1954இல் பதிவுசெய்யப்பட்ட உச்சபட்ச மதிப்பிற்கு கிட்டத்தட்ட நெருக்கமாக உள்ளது. வரும் நாட்களில் நல்ல மழை செயல்பாடு ஏற்பட்டால், 1954ல் பதிவான 920 மி.மீ. என்கிற எக்கச்சக்க மழை பதிவைத் தொடலாம்.

மும்பையில் இந்த ஆண்டில் இதுவரை 2366 மிமீ மழை பதிவாகியுள்ளது.. மும்பையின் சராசரி மழைப்பொழிவு சுமார் 1800 மி.மீ ஆகும், இது இந்த பருவமழையில் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக மும்பையில் 26 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இது சராசரி மழையை விட 67 சதவீதம் அதிகமாகும்.

மும்பை பிரிவில் செப்டம்பர் 13 வரை இந்த மழைக்காலத்தின் மொத்த மழைப்பொழிவு 3422 மி.மீ ஆகும், இது சராசரி மழை அளவை விட 2051 மி.மீ.அதிகமாகும்

இந்த ஆண்டு பருவமழையில் பெய்த கனமழை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முற்றிலும் மாறுபட்டது, அப்போது 73 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை அறிக்கை வரவிருக்கும் நாட்களுக்கு ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டது, அதன்படி கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் மழைப்பொழிவு தொடர வாய்ப்புள்ளது, இருப்பினும் மழை தீவிரத்தன்மையை அடையாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x