Published : 14 Sep 2019 03:37 PM
Last Updated : 14 Sep 2019 03:37 PM

ஒடிசாவில் கணவனை இழந்த பெண்ணுக்கு மூன்று மாதங்களில் மறுமணம்: மாமியாருக்கு குவியும் பாராட்டுக்கள்

பிரதிநிதித்துவப் படம்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் முன்னாள் கிராம சபைத் தலைவரான பெண்மணி ஒருவர் தனது விதவை மருமகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி சமூக ஆர்வலர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அங்கூல் மாவட்டத்தின் கோபரா கிராம பஞ்சாயத்தின் முன்னாள் (சர்பஞ்ச்) தலைவராக இருந்தவர் பிரதிமா பெஹ்ரா தற்போது பலராலும் பாராட்டப் பெறுவது தனது மருமகளுக்கு மறுதிருமணம் செய்து செய்துவைத்தற்காக.

கடந்த புதன் கிழமை (செப்.11)தல்ச்சர் பகுதியில் உள்ள ஜகந்நாத் கோயிலில் தனது மருமகளுக்கு பிரதிமா பெஹ்ரா செய்து மறுதிருமணத்திற்கு கிராம மக்கள் பெருவாரியாக நேரில் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியதாக பெஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதிமாவின் இளைய மகன் ரஷ்மிரஞ்சன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துரங்கா கிராமத்தைச் சேர்ந்த லில்லியை மணந்தார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் ஜூலை மாதம் பரத்பூரில் நிலக்கரி சுரங்க விபத்தில் ரஷ்மிரஞ்சன் இறந்தார்.

இந்நிலையில்தான், மகன் இறந்து மூன்றுமாதம் கூட ஆகாத நிலையில் தனது மருமகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார் பிரதிமா.

இதுகுறித்து பிரதிமா கூறியதாவது:

என் மகனின் திடீர் இழப்பு லில்லியை மிகுந்த சோகத்தில் தள்ளியது. அதிலிருந்து லில்லி யாருடனும் எந்தவித பேச்சுமின்றி நாட்களை கடத்தத் தொடங்கினார். மகன் இறந்த சோகத்தைவிட இப்பெண்ணின் சோகம் என்னை மிகவும் வாட்டியது.

இதைப் பார்த்த எனக்கு அவரது செயலில் மாற்றம் வேண்டும் என்று தோன்றியது அதனால், லில்லிக்கு ஓர் ஆலோசனை வழங்கினேன், மீண்டும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை எதிர்நோக்குமாறு லில்லியை சமாதானப்படுத்தினேன். சிறிது யோசனைக்குப் பிறகு எனது ஆலோசனையை எனது மருமகள் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு ஒரு மணமகனைத் தேட ஆரம்பித்தேன்.

பல்வேறு இடங்களில் முயன்ற பிறகு கடைசியாக எனது சகோதரர் சங்கராம் பெஹெராவை அணுகினேன். லில்லியின் நிலையை எடுத்துக்கூறி அவரது மகன் சங்கிராம் பெஹெராவுடன் மணம் முடிக்க விருப்பமா என்று கேட்டேன். அவரும் அவரது மகனும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

என் மகன் திரும்பி வரமாட்டான் என்று எனக்குத் தெரியும். என் மகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால் 20 வயது மட்டுமே இருக்கும் என் மருமகள் துன்பங்களை என்னால் தாங்க முடியவில்லை. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அவளுக்கு உரிமை உண்டு. எனவே, என் மருமகளுக்கு திருமணம் செய்து வைக்க. நான் முடிவு செய்தேன்'' பிரதிமா கூறினார்.

லில்லியின் புதிதாக திருமணமான கணவர் இதுகுறித்து பேசுகையில், "என் தந்தையும் பிற குடும்ப உறுப்பினர்களும் லில்லியை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொண்ட பிறகு நான் ஏன் ஆட்சேபனை சொல்ல வேண்டும்? மாறாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்றார்.

தனது விதவை மருமகள் திருமணத்தை உறுதிபடுத்தியவகையில் பிரதிமா எடுத்த முடிவை சமூக ஆர்வலர் சுபஸ்ரீ தாஸ் மற்றும் பல பெண் ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். ''முன்னாள் சர்பஞ்ச் (கிராமசபை தலைவர்) என்ற முறையில், மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான சின்னமாக பிரதிமா பெஹெரா மாறியுள்ளார்'' என்று சுபஸ்ரீ தாஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x