Published : 14 Sep 2019 09:00 AM
Last Updated : 14 Sep 2019 09:00 AM

கோவா கடற்படை தளத்தில் தேஜாஸ் விமானம் சோதனை: அடுத்தகட்டமாக போர்க் கப்பலில் தரையிறக்க முடிவு

புதுடெல்லி

கோவாவில் உள்ள கடற்படை சோதனைத் தளத்தில் இலகு ரக போர்விமானமான தேஜாஸ் விமானம் சோதனை செய்யப் பட்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக் கப்பட்ட எல்சிஏ தேஜாஸ் விமானத்தை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கி யது. பலகட்ட சோதனைகளுக்குப் பின்னர் இந்த விமானம் தற்போது இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வகை விமானங்களை பெங்களூருவில் உள்ள இந்துஸ் தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எல்சிஏ) உற்பத்தி செய்து வருகிறது. இதனிடையே கடற் படைக்கு ஏற்ற வகையில் தேஜாஸ் விமானம் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவாவில் உள்ள கடற்படைத் தளத்தில் இந்த விமானம் பல்வேறு சோதனை களுக்கு உட்படுத்தப்பட்டு வரு கிறது. இந்நிலையில் நேற்று போர்விமானங்களை தாங்கிச் செல்லும் கப்பலில் தரையிறங்கும் வகையில் கடற்படை தேஜாஸ் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. வழக்க மாக விமானங்கள் தரையில் இறங்கிய பின்னர் சில நூறு மீட்டர்கள் ஓடிய பின்னர் நிற்கும். ஆனால் விமானத் தாங்கிக் கப்பலில் குறைந்த அளவு தூர முள்ள ஓடுதளமே இருக்கும்.

எனவே அதற்கேற்றவாறு தேஜாஸ் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. அந்த வகையில் தேஜாஸ் விமானம் ‘அரெஸ்டட் லேண்டிங்' எனப்படும் வகையில் தரையில் இறங்கியவுடன் நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. கோவாவில் உள்ள சோதனை மையத்தில் இது வெற்றிகரமாக சோதிக்கப் பட்டுள்ளதால் அடுத்ததாக ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் இந்த விமானம் தரையிறக் கப்படவுள்ளது என கடற்படை தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x