Published : 14 Sep 2019 08:54 AM
Last Updated : 14 Sep 2019 08:54 AM

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடந்த இடதுசாரிகள் பேரணியில் தடியடி

வேலைவாய்ப்பு கோரி இடதுசாரி அமைப்புகள் சார்பில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.படம்: பிடிஐ

கொல்கத்தா

மேற்குவங்க தலைநகர் கொல்கத் தாவில் இடதுசாரிகள் நேற்று நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு களை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் வேலையில் லாத திண்டாட்டம் அதிகரித்து வருவதாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இடதுசாரி அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில் கொல் கத்தாவில் நேற்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடை பெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஹவுரா பகுதியில் போலீஸார் தடுப்புகளை அமைத்து பேரணியை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் இடதுசாரிகளுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் பலர் காயமடைந்த னர். இதைத் தொடர்ந்து போலீ ஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

பேரணி குறித்து டிஒய்எப்ஐ மாநில செயலாளர் சயன்தீப் மித்ரா கூறியதாவது: வேலைவாய்ப்பு கோரி சிங்குரில் இருந்து கொல் கத்தா நோக்கி பேரணி நடத்தி னோம். எங்கள் தரப்பில் இருந்து 5 பேர் தலைமைச் செயலகத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீஸார் உறுதி அளித்தனர்.

கொல்கத்தாவில் அமைதி யாகவே பேரணி நடைபெற்றது. ஆனால் திடீரென போலீஸார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் மாநிலத்தின் பொருளா தாரம் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தடியடி நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸார் கூறியபோது, “சாலையில் அமைக்கப்பட்டிருந்த 3 தடுப்புகளை உடைத்துவிட்டனர். சிலர் கற்களை வீசியதில் போலீஸ் காரர்கள் காயமடைந்தனர். சட்டம், ஒழுங்கை மீறியதால் தடியடி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற் பட்டது” என்று தெரிவித்தனர்.

வரும் 2021 தொடக்கத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் இப்போதே தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கிவிட்டன. குறிப் பாக அரசுக்கு எதிரான போராட் டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளைக் கைப் பற்றியது. எனவே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூலுக் கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x