

புதுடெல்லி
வடகிழக்கு பிராந்திய காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸின் தோல் விக்கு பொறுப்பேற்கும் விதமாக, அக்கட்சியின் தலைவர் பதவியி லிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின்னர், காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தலைவராக பதவியேற்ற பின்னர், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். இதற்காக, பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தனித் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர் களுடன் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் சோனியா நேற்று ஆலோசனை நடத்தினார். மேகாலயா, மிசோரம், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் காங் கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்கள் சந்தித்து வரும் பிரச் சினைகள், அசாம் தேசிய குடி மக்கள் பதிவேடு விவகாரம், வடகிழக்கு பிராந்தியத்தில் கட் சியை பலப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர, வடகிழக்கு மாநிலங் களுக்கான காங்கிரஸ் ஒருங் கிணைப்புக் குழுக்களை பலப்படுத் தவும், அவற்றை ஒருங்கிணைக்க வும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், அசாமில் உள்ள குவாஹாட்டி நகரில் இந்த ஒருங்கிணைப்புக் குழுவுக்கென நிரந்தர அலுவலகம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத் தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், அகமது படேல் கலந்து கொண்டனர்.