Published : 14 Sep 2019 07:33 AM
Last Updated : 14 Sep 2019 07:33 AM

நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவற்றை மறுசீரமைக்க முடிவு

ஹர்திப் சிங் புரி

புதுடெல்லி

டெல்லியில் உள்ள சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிட வளாகம், நார்த் பிளாக், சவுத் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை, ராஜ்பாத், இந்தியா கேட் உள்ளிட்ட கட்டிடங்களை புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப் பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் தற்போது துறைகள் அதிகரித்துள் ளன. இதனால் இடப் பற்றாக் குறை, வாகன நிறுத்துமிடத்தில் நெரிசல் போன்ற பிரச்சினைகள் உள்ளன.

இதையடுத்து நாடாளுமன்ற வளாக கட்டிடத்தை மறுசீரமைக்க வும், அங்கு வேறு சில புதிய கட்டிடத்தை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணி அடுத்த ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை செயலக அலுவலகங்களுக்கான புதிய கட்டிட பணி 2024ல் முடிவடை யும் என தகவல் வெளியாகி உள் ளது. இதற்கான பணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செய்து வருகிறது.

புதிய கட்டிடம் கட்டவும் தற்போ துள்ள கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யவும் சர்வதேச அளவிலான கட்டிட வடிவமைப்பு நிறுவனங் களிடம் திட்ட அறிக்கைகள் கோரப் பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு நாடாளுமன்றத் தின் குளிர்கால கூட்ட தொடரை புதிய கட்டிடத்தில் நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி நேற்று கூறிய தாவது: நாடாளுமன்ற கட்டிடம், சென்டிரல் விஸ்டா மற்றும் பல்வேறு துறைகளுக்காக ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படும்.

இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும். மேலும் ராஷ்டிரபதி பவன் முதல் இந்தியா கேட் வரை விரிந்துள்ள 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகள், நாடாளுமன்ற வடக்கு, தெற்கு கட்டிடம் ஆகியவை மறுசீரமைப்பு செய்யப்படும். நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான வடிவமைப்பு மற்றும் இடம் ஆகியவை பரிசீலனை யில் உள்ளன. இதற்கான டெண்டர் கள் அடுத்த மாத மத்தியில் கோரப்படும் என எதிர்பார்க்கிறோம்.

2024-ம் ஆண்டு தேர்தலுக்குள் இந்தக் கட்டிடங்களை கட்டி முடிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x