Published : 13 Sep 2019 02:44 PM
Last Updated : 13 Sep 2019 02:44 PM

டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் தேவையற்றது: நிதின் கட்கரி

புதுடெல்லி

டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை தேவையற்றது என மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க, வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பெண் வாகன ஓட்டிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது, அதேபோல் வார இறுதி நாட்களிலும் கட்டுப்பாடு கிடையாது, இப்போதைக்கு 10 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக்பூரில் வாகன எரிவாயு நிரப்பும மையத்தை தொடங்கி வைத்த மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இதுபற்றி கூறியதாவது:
ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை தேவையற்றது. இதனால் பெரிய அளவில் பலன் கிட்டும் என நான் எண்ணவில்லை.

அதேசமயம் டெல்லியில் புகை மாசு ஏற்படாமல் தடுக்க புதிய சுற்றுவட்டப்பாதைகளை அமைப்பது அவசியம். சாலைகள் அமைப்பதற்காகவே மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

யமுனா ஆற்றை சுத்தம் செய்யும் திட்டமும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கவும் பல நடவடிக்கைகளை டெல்லியில் மேற்கொண்டு வருகிறோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x