

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
தேசிய பாதுகாப்பு படைகளின் வீரர்கள் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில் 750 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மனஅழுத்தம் மற்றும் பணிச் சுமை காரணமாக பாதுகாப்பு படை யினர் தற்கொலை செய்வது அதி கரிப்பதாகக் கருதப்படுகிறது. இது போல், பலியானவர்கள் எண் ணிக்கை, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது ஏற்பட்டஉயிர் தியா கத்தை விட அதிகம் ஆகும். இத னால், மிகவும் கவலைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலையை தடுப்பதில் அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய் துள்ளது. இதற்காக சிறப்பு முகாம் களை நடத்தி படை வீரர்களின் நலன் மீதான அக்கறையை அதிகப்படுத் துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, ‘உளவியல் நிபுணர்கள் உதவியுடன் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கான புத்துணர்வு முகாம் கள் நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள வருபவர்கள் கூறும் புகார் மற்றும் குறைகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தன.
வீரர்களின் தற்கொலைக்கு காரணமாக நீண்ட காலம் தமது குடும்பத்தினரை விட்டு பிரிந் திருப்பது, குறித்த காலத்தில் பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைக்காமல் இருப்பது மற்றும் பணிச்சுமை போன்றவை உள்ளன.
இதை அனைத்து பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தமது வீரர்களை உயர் அதிகாரிகள் அவ்வப்போது அழைத்து பேச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர் களை உடனடியாக உளவியல் நிபுணர்களின் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் எனவும், அல்லது அவர் களிடம் பேசிப் பிரச்சினைகளை தீர்க்க முயலவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு, எல்லைப்பாதுகாப்பு படை, சாஸ்திரா சீமா பல், இந்தோ திபெத் தியன் எல்லைப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் என 6 மத்தியப் பாதுகாப்புப்படைகள் உள்ளன.