சரத் ராகவன்

Published : 12 Sep 2019 16:39 pm

Updated : : 12 Sep 2019 16:39 pm

 

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

maths-never-helped-einstein-discover-gravity-piyush-goyal

பொருளாதார மந்த நிலை குறித்த கருத்துகளை மறுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜிடிபி கணக்குகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல் தொழிற்துறையில் ஏற்பட்ட மந்தநிலைக்குக் காரணமாக ஓலா, உபர் சேவைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதையடுத்து ஜிடிபி கணக்கு பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, ஐன்ஸ்டீனுக்கும் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க கணிதம் உதவவில்லை என்று மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வர்த்தக வாரிய கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உயர்வடைவதன் பாதையில்தான் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றார்.

“தொலைக்காட்சியில் காட்டப்படும் அந்த கணக்கீடுகள் வழியில் செல்ல வேண்டியதில்லை, அதாவது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் 12% பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய ஜிடிபி கணக்குகளைப் பார்க்க வேண்டாம். இத்தகைய கணிதங்கள் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவவில்லை.

அவர் ஒரு அமைப்பாக்கம் செய்யப்பட்ட சூத்திரத்தின் மூலமும் கடந்தகால அறிவின் அடிப்படையிலும் சென்றிருந்தாரேயானால் உலகில் புதிய விஷயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன்” என்றார் பியூஷ் கோயல்.


Maths never helped Einstein discover gravity: Piyush Goyalபுவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author