Published : 12 Sep 2019 03:45 PM
Last Updated : 12 Sep 2019 03:45 PM

விவசாயிகள், வர்த்தகர்கள் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


ராஞ்சி
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. இதன் மூலம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைய முடியும்.

60 வயதை கடந்த பின், விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை அவர் வழங்கினார். இந்த விழாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களவைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதுபோலவே சிறு வர்த்தகர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத்தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலக புதிக கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

பி்ன்னர். சாஹிப்கஞ்ச் நகரில் செல்லும் கங்கை ஆற்றில் படகுகள் மூலம் சரக்குகளைக் எடுத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. சாஹிப்காஞ்ச் நகரில் உள்ள இந்த மையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தக் கட்டிடத்தை உள்நாட்டு நீர்வழி ஆணையம் உருவாக்கியுள்ளது. ஆண்டுக்கு 30 டன் சரக்குகளைக் கையாள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கையாளும் முனையத்தால் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என நம்பப்படுகிறது.

இந்தவிழாவில் பேசிய பிரதமர் மோடி ‘100 நாட்கள் வெறும் டிரைலர் தான்; முழுப்படம் இனிமேல் தான்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x