செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 13:05 pm

Updated : : 12 Sep 2019 13:05 pm

 

தரமான சாலைகளில் தான் அதிக விபத்துகள் நடக்கின்றன: கர்நாடக துணை முதல்வர் கருத்து

karnataka-dy-cm-govind-karjol-major-accidents-happen-due-to-good-roads
கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல்

பெங்களூரு
நல்ல சாலைகளால் தான் அதிகமான விபத்துகள் நடக்கிறது, எனவே விபத்தை குறைக்க கடுமையான அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என கர்நாடக மாநில துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. பல்வேறு மாநில அரசுகளும் இதனை படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட பல்வேறு அபராத தொகைகளையும் குஜராத் அரசு குறைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கர்நாடாகவும் அபராதத்தை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் கூறியதாவது:

தரமான சாலைகளில் தான் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. 120 கிலோ மீட்டர் முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது தான் விபத்துகள் நடக்கின்றன. எனவே தான் பெரும்பாலான விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன.

எனவே விபத்துக்களை தடுப்பதற்காக அதிகமான அபராதம் விதிப்பதாக கூறப்படுவதை என்னால் ஏற்க முடியாது. புதிய வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராத தொகை கர்நாடகாவில் மாற்றியமைக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


தரமான சாலைகர்நாடக துணை முதல்வர்Karnataka Dy CM Govind KarjolGood roads
Popular Articles

You May Like

More From This Category

More From this Author