செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 08:26 am

Updated : : 12 Sep 2019 08:26 am

 

டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து பெங்களூருவில் ஒக்கலிகர்கள் பேரணி

okkaligas-rally-for-sivakumar-arrest

பெங்களூரு

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒக்கலிகா சாதி சங்கத்தினர் பெங்களூருவில் நேற்று பேரணி நடத்தினர்.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரு மான டி.கே.சிவகுமார் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழ‌க்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து காங்கிரஸா ரும், அவரது ஆதரவாளர்களும் கர்நாடகாவில் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, டி.கே.சிவகுமார் ஒக்கலிகா வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பாஜக வினர் பழிவாங்குவதாக அந்த சமூகத்தைச் சேர்ந்த சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அவரை கைது செய்ததை கண்டித் தும், விடுதலை செய்யக்கோரியும் ஒக்கலிகா சாதி சங்கத்தினர் கர்நாடகாவில் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக நடந்த இந்த போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். பெங்களூருவில் தேசிய கல்லூரியில் நடந்த ஒக்கலிகா சங்கத்தின் போராட்டத்தில் காங்கிரஸ், மஜத, கன்னட அமைப்பினர் உட்பட‌ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தினேஷ் குண்டுராவ்,கிருஷ்ண பைரே கவுடா, ராமலிங்க ரெட்டி, பிரியங்க் கார்கே உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் இதில் பங்கேற்ற னர். அங்கு பேசிய தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து உரை யாற்றினர்.


இதையடுத்து, தேசிய கல்லூரியில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஒக்கலிகா சங்கத்தினர் பேரணியாக சென்றனர். இந்த பேரணி சென்ற வழியெங்கும் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதன் முடிவில் ஆளுநர் மாளிகையில் ஒக்கலிகா சங்கத்தினர் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். அதில் டி.கே.சிவகுமார் மீதான வழக்கை ரத்து செய்து, அவரை விடுவிக்க கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.கே.சிவகுமார்ஒக்கலிகர்கள் பேரணிகர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்ஒக்கலிகா சாதி சங்கத்தினர்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author