செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 08:18 am

Updated : : 12 Sep 2019 08:18 am

 

உன்னாவ் பலாத்கார வழக்கு: சிகிச்சை பெற்று வரும் பெண் மருத்துவமனையில் வாக்குமூலம்

unnao-rape-case

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலம உன்னாவ் என்ற இடத்தில் 17-வயது இளம்பெண்ணை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. புகாரின் பேரில் குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இதனிடையே, கடந்த ஜூலை 28-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இதற்கு செங்காரும் அவரது கூட்டாளிகளுமே காரணம் என்று பெண்ணும் அவரது குடும்பத் தாரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர் நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை அரங்கில் தற்காலிக நீதிமன்றம் அமைத்து சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் வாக்குமூலம் பெற உத்தரவிட்டது. அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை யில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு, பாதிக்கப்பட்ட பெண் நேற்று வாக்குமூலம் அளித்தார். எம்எல்ஏ செங்காரும் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையின்போது நீதி மன்ற உத்தரவுப்படி சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன. நீதிபதியின் கேள்விகளுக்கு பெண் பதிலளித்தார். அவற்றை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.


உன்னாவ் பலாத்கார வழக்குசிகிச்சை பெற்று வரும் பெண்மருத்துவமனையில் வாக்குமூலம்பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author