செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 18:26 pm

Updated : : 11 Sep 2019 18:26 pm

 

காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு: ஸ்ரீநகரில் தனியார் வாகனங்கள் ஓடின

restrictions-lifted-from-most-parts-of-kashmir-private-vehicles-on-roads-in-srinagar
செப்.11, 2019 அன்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களைச் சந்தித்த போது.. | ராய்ட்டர்ஸ்.

ஸ்ரீநகர், பிடிஐ

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநகரில் தனியார் வாகனங்கள் ஓடியது என்றும், எனினும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ராணுவம் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள் ஓடினாலும் பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

தனியார் வாகனங்கள் நிறைய ஓடியதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சில பல ஆட்டோ ரிக்‌ஷாக்கள், மாவட்டங்களுக்கு இடையிலான தனியார் கேப் சேவைகளும் ஆங்காங்கே தொடங்கியுள்ளததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மசூதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தைத் தூண்டி போராட்டங்களை நடத்த வாய்ப்புகளை சில சுயநலமிகள் உருவாக்கி விடக்கூடாது என்று அன்றைய தினங்களில் மட்டும் பலவீனமான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதில்லை என்று காஷ்மீர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்கின் முக்கிய மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு கடந்த ஒரு மாதகாலமாக அனுமதி வழங்கப்படவில்லை.


ஆனாலும் கடைகள் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு பள்ளிகளை திறக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததற்குக் காரணம் பாதுகாப்பு அச்சத்தினால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று தெரிகிறது.

Restrictions lifted from most parts of Kashmir private vehicles on roads in Srinagarகாஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு: ஸ்ரீநகரில் தனியார் வாகனங்கள் ஓடின
Popular Articles

You May Like

More From This Category

More From this Author