Published : 11 Sep 2019 03:52 PM
Last Updated : 11 Sep 2019 03:52 PM

பயங்கரவாதம் சர்வதேச அச்சுறுத்தலாகிவிட்டது: பிரதமர் மோடி

மதுரா,

பயங்கரவாதம் ஏதோ ஒரு தனிப்பட்ட நாட்டின் பிரச்சினையாக இல்லாமல் இன்று அது சர்வதேச அச்சுறுத்தலாகிவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுராவில் அரசு சார்பில் 'துய்மைப் பணியும் சேவையே' உள்ளிட்ட 19 திட்டங்களை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "பயங்கரவாதம் ஏதோ ஒரு தனிப்பட்ட நாட்டின் பிரச்சினையாக இல்லாமல் இன்று அது சர்வதேச அச்சுறுத்தலாகிவிட்டது. பயங்கரவாதத்தை வளர்க்க நமது அண்டை நாடு உதவுகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சுவாமி விவேகானந்தா அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். இதுவரை செப்டம்பர் 11-ஐ நாம் அதற்காகவே நினைவுகூர்ந்தோம். ஆனால், பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்ததன் மூலமாக இப்போதெல்லாம் செப்டம்பர் 11 பயங்கரவாதத்தை வேரறுக்க நினைவு கூரும் நாளாகிவிட்டது.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஸ்திரமான நடவடிக்கை எடுத்திருக்கிறது. தொடர்ந்து எடுத்துவருகிறது. எதிர்காலத்திலும் இது தொடரும்.
பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிப்பவர்கள் புகலிடமளிப்பவர்களுக்கு எதிராக உலக நாடுகள் திரள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தியா தொடர்ந்து தகுந்த அடி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது" என்றார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x