Published : 11 Sep 2019 03:35 PM
Last Updated : 11 Sep 2019 03:35 PM

‘‘பசு என்றாலே சிலருக்கு ஷாக் அடிக்கிறது’’ - பிரதமர் மோடி பேச்சு

மதுரா
பசு, ஓம் என்ற வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி ஏற்படுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

மதுராவில் உத்தர பிரதேச மாநில அரசின் சார்பில் துய்மை பணியும் சேவையே, கால்நடைகளுக்கான நோய் தடுப்புத் திட்டம் உள்ளிட்ட 19 திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நாடுமுழுவதும் பசுக்கள், எருமைகள், செம்பறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசு 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தை மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பசு, ஓம் என்ற வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்களுக்கு முடி சிலிர்த்து விடுகிறது. இது துரதிருஷ்டவசமானது. இந்த நாடு 16-ம் நூற்றாண்டுக்கு சென்று விட்டதாக எண்ணுகின்றனர். கால்நடைகள் இல்லாமல் கிராமப் பொருளாதாரத்தை யாராவது பேச முடியுமா.

இந்திய பொருளாதாரம் குறித்து கவலைப்படும் நேரத்தில், எப்போதுமே சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களை காப்பது முக்கியமானது. பொருளாதார வளர்ச்சியும், இயற்கையை காப்பதும் சமமான அளவில் இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

#WATCH Prime Minister Narendra Modi plays with a cow and its calf in Mathura. pic.twitter.com/SQD84mHcDb

முன்னதாக மதுராவில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பெண்களுடன் அவர் கலந்துரையாடினார். அங்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x