Published : 11 Sep 2019 02:49 PM
Last Updated : 11 Sep 2019 02:49 PM

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக பிரமோத் குமார் மிஸ்ரா நியமனம்

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியான பிரமோத் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இருந்த நிர்பேந்திர மிஸ்ரா பதவி விலகியதையடுத்து, பி.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கூடுதல் முதன்மைச்செயலாளர் பொறுப்பில் இருந்து முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு பி.கே.மிஸ்ரா 11-ம்தேதி முதல் (இன்று) உயர்த்தப்பட்டுள்ளார். இதேபோல பிரதமர் அலுவலகத்தில் மற்றொரு முக்கியப் பொறுப்புக்கும் நியமனம் நடந்துளளது. மூத்த அதிகாரியாகவும், முன்னாள் அமைச்சரவைச் செயலாளராகவும் இருந்த பி.கே. சின்ஹா, பிரதமர் அலுவலகத்துக்கான அலுவல்களுக்கான சிறப்பு அதிகாரியாக (ஓஎஸ்டி) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இரு அதிகாரிகளும் பதவியில் இருப்பார்கள். இந்த இரு விஷயங்களில் எது முதலில் முடிவுக்கு வருகிறதோ அதன்படி பதவிக்காலம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரமோத் குமார் மிஸ்ரா பிரதமர் மோடி குஜராத் முதல்வராக 2001-ம் ஆண்டில் இருந்தபோது, முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருந்தார். 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்றபின், கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

முதன்மை ஆலோசகர் சின்ஹா பிரதமர் அலுவலகத்தில் கொள்கை ரீதியானவிஷயங்களில் அவரின் பங்களிப்பு இருக்கும். கடந்த 2015-ம் ஆண்டு அமைச்சரவைச் செயலாளராக மிஸ்ரா நியமிக்கப்பட்டு அதன்பின் தொடர்ந்து பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு 2019 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x