

சண்டீகர்
இந்தியாவிடம் அடைக்கலம் தேடி பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடி யிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்தவர் பல்தேவ் குமார். இவர் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள பாரிகோட் (தனி) தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவர் தனது மனைவி, 2 குழந்தை களுடன் இந்தியாவின் பஞ்சாபுக்கு அண்மையில் வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கியுள் ளார்.
பல்தேவ் குமார் செய்தியாளர் களிடம் நேற்று கூறும்போது, “காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ் தானில் நிலைமை மோசமாக உள்ளது. பாகிஸ்தானில் வசித்து வரும் சிறுபான்மையினர் பாதுகாப் பாக இல்லை. அவர்கள் அச்ச உணர் விலேயே வசிக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு சிறுபான்மை யினராக இருக்கும் இந்துக்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தேடிப் பிடித்து இந்துக்களை கொலை செய்வதும் நடக்கிறது. கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏவான என்னை சுமார் 2 வருடம் சிறையில் அடைத்து துன்புறுத்தினர்.
நான் பாகிஸ்தானுக்குத் திரும் பிச் செல்ல மாட்டேன். எனக்குப் பாதுகாப்பும், புகலிடத்தையும் பிரதமர் மோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்துக்கள், சீக்கியத் தலைவர் கள், சீக்கிய மக்கள் அங்கு துன் புறுத்தப்படுகின்றனர். என்னுடைய தம்பிகள் பாகிஸ்தானில் உள்ள னர். அங்கு வசித்து வரும் சீக்கிய, இந்து குடும்பங்கள் இந்தியாவுக்கு இடம்பெயர விரும்புகின்றனர். அங்குள்ள குருத்துவாராக்கள் மோசமான நிலையில் உள்ளன. சிறுபான்மையினருக்கு அங்கு மரியாதையே இல்லை.
அவர்களை கட்டாயமாக மதம் மாற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கூட சீக்கிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கட்டாயப் படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயன்றனர். இது பத்திரிகையில் வெளிவந்து பிரச்சினை பூதாகர மாக வெடித்தது” என்றார்.
பல்தேவ் குமார் 2016-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப் பட்டார். தெஹ்ரீக்-இ-இன்சாப் கட் சியைச் சேர்ந்த எம்எல்ஏ சர்தார் சோரன் சிங் என்பவரை, பல்தேவ் குமார் 2016 ஏப்ரலில் சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.