Published : 11 Sep 2019 09:46 AM
Last Updated : 11 Sep 2019 09:46 AM

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் ஊரடங்கு அமல்

ஸ்ரீநகர்

இஸ்லாமியர்களின் புனித பண்டி கையாக கருதப்படும் முஹ ரத்தை ஒட்டி, ஊர்வலங்கள் நடை பெறுவதை தடுப்பதற்காக காஷ் மீரில் ஊரடங்கு உத்தரவுக்கு சம மான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் 144 தடை உத்தர வுகளும், பல்வேறு கட்டுப்பாடு களும் விதிக்கப்பட்டன. மேலும், தொலைபேசி, இணையச் சேவை களும் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே, காஷ்மீரில் அமைதி நிலவியதை அடுத்து, அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு களை மத்திய அரசு படிப்படியாக திரும்பப் பெற தொடங்கியது. ஒரு கட்டத்தில், காஷ்மீர் முழுவதுமே கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், முஹரம் பண் டிகையை ஒட்டி, தற்போது காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவுக்கு சமமான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. முஹரத்தை முன்னிட்டு ஊர்வலங்கள், பேரணிகள் நடை பெறுவதை தடுப்பதற்காகவே இந் தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊர்வலத்துக்காக ஏராளமா னோர் ஒன்றுகூடும் போது, அரசுக்கு எதிரான போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக வன்முறைகளும் ஏற்படக் கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித் துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளால் காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்

இந்நிலையில், காஷ்மீர் விவ சாயிகள் விளைவிக்கும் ஆப்பிள் களை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, விவசாயிகள் தங்கள் ஆப்பிள்களை மற்ற பகுதிகளுக் கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளிடமிருந்து ஆப்பிள்களை நேரடியாக கொள் முதல் செய்ய மத்திய அரசு நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்டதற்கான பணம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x