

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் தில் ஆய்வு நடைபெற்று வரும் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி யாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அறிவித்துள்ளது. அங்கு கிடைத்த எலும்புக்கூடுகள் மற்றும் இதர பொருட்கள் மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுவதே இதற்குக் காரணம் ஆகும்.
டெல்லியில் இருந்து 80 கி.மீ. தொலைவில், உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தின் சனவுலி கிராமத்தில் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் 3 பெரிய சவப்பெட்டிகளுடன் 8 பெரிய அரசகுல கல்லறைகள் கிடைத் துள்ளன. இவை சிந்துசமவெளி நாகரீக காலத்தின் இறுதி கட்டமான கி.மு.2000 முதல் கி.மு.1800-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத் தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கல்லறைகளில் சேர்த்து புதைக் கப்பட்ட தாமிரப் பாத்திரங்களில் அவர்கள் உயர் சமூகத்தைச் சேர்ந் தவர்கள் என்பதற்கான குறியீடு கள் உள்ளன. தாமிரத்தாலான உலோகக் கேடயம், கைப்பிடியுட னான குத்துவாள், வாள் உறை, தலைக்கவசம் ஆகிய போர் கருவி களும் முதன்முறையாகக் கிடைத் துள்ளன. ஒரு கல்லறையில் பெண் களுக்கான அழகுப்பொருட் களுடன், மரத்தாலான 3 ரதங் களும் புதைக்கப்பட்டுள்ளன. மரத்தாலான அதன் சக்கரங்கள் மக்கி மண்ணாகி விட்டன.
எனவே, அப்பொருட்கள் ஆரியர் களின் காப்பியமான மகாபாரத காலத்தைச் சேர்ந்தவை எனவும் உ.பி. வரலாற்றாசிரியர்கள் கூறு கின்றனர். மகாபாரதம், ஹரியாணா மற்றும் உ.பி. மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெற்றதாக குறிப் பிடப்பட்டுள்ளது. இக்காவியத்தின் படி, பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியம், ஆட்சிப்பகுதி உட்பட அனைத்தையும் சூதாட்டத்தில் இழக்கின்றனர். இவற்றை 13 வருடங்களுக்குப் பிறகு திரும்ப வந்து கவுரவர்களிடம் கேட்கின்ற னர். இவை மறுக்கப்படவே, ஐந்து கிராமங்களாவது தரும்படி கேட்ட தாக மகாபாரதம் கூறுகிறது. இந்த 5-ல் ஒரு பகுதியாக பாக்பத் இடம் பெற்றுள்ளது. இங்கிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் மகாபாரதப் போர் நடந்த (ஹரியாணாவின்) குருஷேத்திரமும், அவர்கள் தலை நகரான அஸ்தினாபுரமும் 50 கி.மீ தொலைவில் உ.பி.யில் உள்ளது.
இந்நிலையில், சனவுலியில் தொல்லியல் ஆய்வு நடைபெறும் 28.67 ஏக்கர் நிலப்பகுதியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஏஎஸ்ஐ அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 1958-ம் ஆண்டின் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் சட்டப்படி வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, அந்த இடம் முற்றிலும் மத்திய அரசு சார்பில் பாதுகாக்கப்படும். இதற்காக, அந்நிலப்பகுதியின் உரிமையாளர்களான விவ சாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்கும்.
இதுகுறித்து ஏஎஸ்ஐயின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் டி.சத்திய மூர்த்தி ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘புராதனப் பொருட் கள் கிடைக்கும் இடங்களை பாது காக்க ஏஎஸ்ஐ அறிவிக்கை வெளியிடுவது வழக்கம். தமிழகத்தின் ஆதிச்சநல்லூரின் தொல்லியல் ஆய்வுப்பகுதிக்கும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதுபோல், தற்போது ஆய்வு நடைபெற்று வரும் கீழடியின் நிலப்பகுதிக்கும் அறிவிக்கை வெளியிட்டு ஆய்வை தொடர்வது அவசியம். இதற்காக தமிழக அரசு அந்நிலப்பகுதியை அளந்து பரிந்துரை செய்ய வேண்டியது அவசியம். இங்கும் பாக்பத்தை போல பழம்பெரும் பொருட்கள் கிடைத்து வருகின்றன” என்றார்.