Published : 11 Sep 2019 07:38 AM
Last Updated : 11 Sep 2019 07:38 AM

அனைத்து ஆவணங்களும் ஹெல்மெட்டுக்குள்... போலீஸாரை திகைப்பில் ஆழ்த்தும் வாகனஓட்டி

வடோதரா

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லி அருகே குர்காவ்ன் பகுதியில் ரு.15,000 மதிப்புள்ள ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றவருக்கு போக்கு வரத்து போலீஸார் ரூ.23,000 அபராதம் விதித்தனர். ஒடிசா வில் அண்மையில் ஒருஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47,000-ம் மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.27,500-ம் அபராதம் விதிக்கப் பட்டது. டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் அண்மையில் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்ட இளை ஞர், ஆத்திரத்தில் தனது மோட் டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினார்.

உத்தர பிரதேசத்தின் அலிகர் நகரில், காரை ஓட்டிச் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஹெல்மெட் அணிந்து காரை ஓட்டி வருகிறார்.

இதுபோல் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சுவாரசிய மான செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகி ரப்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் போலீஸாரின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளி யாகி வருகின்றன. அவர்கள் அடை யாளம் காணப்பட்டு அவர்களுக் கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச் சர் நிதின் கட்கரி கூறியபோது, “அதிவேகமாக காரில் சென்ற தால் நானும் அபராதம் செலுத்தி யுள்ளேன். மத்திய அமைச்சர், முதல்வர், போலீஸார், வழக்கறி ஞர்கள், பத்திரிகையாளர் உட்பட யாராக இருந்தாலும் அபராதம் செலுத்தியாக வேண்டும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களில் சாலையில் போக்குவரத்து போலீஸாரை பார்த்ததும், 'நில், கவனி, ஓடு' என்ற வகையில் வாகனஓட்டிகள் மாற்றுப் பாதையில் தெறித்து ஓடுகின்றனர். ஆனால் குஜராத்தின் வடோதரா நகரை சேர்ந்த ராம் ஷா, போலீஸாரையே திகைப்பில் ஆழ்த்தி வருகிறார்.

தினமும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் அவர், தனது ஹெல்மெட்டுக்குள் அனைத்து ஆவணங்களையும் ஒட்டி லேமி னேட் செய்துள்ளார். ஹெல்மெட் டின் முகப்பு, பின்புறம், வலது, இடது புறத்தில் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், புகை மாசு சான்றுகளை அவர் அழகாக ஒட்டி வைத்துள்ளார்.

வாகன சோதனையின்போது அவரது ஹெல்மெட்டை பார்த்த வுடன் போலீஸார் எந்த கேள்வி யும் கேட்காமல் அனுப்பிவிடு கின்றனர். பெரும்பாலான இடங் களில் போலீஸார் அவரை தடுத்து நிறுத்துவதுகூட இல்லை.

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட் டர் உள்ளிட்ட சமூக வலைதளங் களில் ராம் ஷாவின் ஹெல்மெட் வீடியோ வைரலாக பரவி வரு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x