மோடியை எதிர்த்து கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி விருப்பம்

மோடியை எதிர்த்து கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி விருப்பம்
Updated on
1 min read

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அமைப் பாளரும் டெல்லி முன்னாள் முதல் வருமான அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் கட்சி நிர்வாகி சஞ்சய் சிங் பேசுகையில், “பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாராணசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிட வேண்டும்” என்றார்.

மற்றொரு முக்கிய நிர்வாகி மனீஷ் சிசோடியா பேசுகையில், “முகேஷ் அம்பானி மீதான கேஜ்ரி வாலின் குற்றச்சாட்டுகளுக்கு வாராணசி மக்கள் பதில் அளிக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

ஆனால் இவர்களுக்குப் பின் பேசிய கேஜ்ரிவால், மக்களவை தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக எதுவும் பேசவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in