செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 16:24 pm

Updated : : 10 Sep 2019 16:24 pm

 

நாட்டின் வயது குறைந்த ஆளுநர் தமிழிசை: வயதானவர் ஆந்திர ஆளுநர்

tamilisai-soundararajan-youngest-governor-andhra-s-harichandan-oldest-at-85
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுடெல்லி,

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (58), நாட்டில் உள்ள மாநில ஆளுநர்களில் குறைந்த வயதுடையவராகவும், ஆந்திரா மாநிலத்தின் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் (85) வயதான ஆளுநராகவும் கருதப்படுகிறார்.

கடந்த 1-ம் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இதன்பின், நாட்டில் உள்ள மாநில ஆளுநர்களின் சராசரி வயது 73 ஆக இருக்கிறது.

58 வயதான தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராகவும், தேசியச் செயலாளராகவும் இருந்தவர். தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருந்த இஎஸ்எல் நரசிம்மன் பதவிக்காலம் முடிந்த நிலையில் அங்கு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

60 வயதுக்குக் கீழான ஆளுநர்களில் தமிழிசை மட்டுமே இருக்கிறார். அவருக்கு அடுத்து மிகக்குறைந்த வயதில் குஜராத் மாநில ஆளுநராக இருக்கும் ஆச்சார்யா தேவ்ரத் உள்ளார். இவருக்கு வயது 60. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்களின் வயது 70 முதல் 79க்குள்ளாகவே இருக்கிறது.

28 மாநிலங்களில் ஆளுநர்களில் ஒருவர் 60 வயதுக்குக் கீழாகவும், 60 - 69 வயதில் 7 பேரும், 70- 79 வயதில் 14 பேரும், 80 - 89 வயதில் 6 பேரும் உள்ளனர்.


தற்போது இரு மாநிலங்களுக்கும் ஒரே ஆளுநராக அசாம் ஆளுநராக இருக்கும் ஜகதிஷ் முக்கிதான், மிசோரம் மாநில ஆளுநராகவும் மார்ச் மாதத்தில் இருந்து கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

தற்போதுள்ள ஆளுநர்களில் 19 பேர் முதல் முறையாக ஆளுநர்களாக வந்துள்ளனர். 9 பேர் ஏற்கெனவே வேறு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர்கள். 6 மாநிலங்களில் ஆளுநர்களாக பெண்கள் உள்ளனர்.

ஆந்திர மாநில ஆளுநராக இருக்கும் ஹரிசந்தன் பாஜகவின் மூத்த தலைவர். கடந்த 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் ததி பிறந்தவரான ஹரிசந்தன் ஒருங்கிணைந்த ஆந்திராவின் 23-வது ஆளுநராகவும், தற்போது இவர் மிகவும் வயதான ஆளுநராகவும் இருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் கடந்த 1961-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய ஹரிசந்தன், 1971-ம் ஆண்டு ஜன சங்கத்திலும், 1980-ம் ஆண்டு ஒடிசா பாஜகவிலும் இணைந்தார். நாட்டில் அவசர நிலை கொண்டுவந்தபோது அதை எதிர்த்ததால், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஹரிசந்தன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு 84 வயதாகிறது. இவர் 2-வது வயது முதிர்ந்த ஆளுநர்.

பிடிஐ

Tamilisai SoundararajanOungest governoAndhra's Harichandan oldestTelanganaAll state governorsதெலங்கானாஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்ஆந்திரா மாநில ஆளுநர்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author