

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக சிபிஐ இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகார வட்டாரங்கள் கூறும்போது, “ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் செப்டம்பர் 3-வது வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் குற்றம் இழைத்தவராக ப.சிதம்பரத்தின் பெயர் இடம் பெறும்.
ப.சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் மற்றும் சில நிறுவனங் களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ப.சிதம்பரத் திற்கு எதிரான சிபிஐ குற்றப் பத்திரிகையால் அவர் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும்” என்று தெரிவித்தன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக ப.சிதம்பரத்தை சிபிஐ தனது காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
இதில் ப.சிதம்பரத்திடம் மேற்கொள்ளப்பட்ட 100 மணி நேர விசாரணயில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி குறித்தும் கார்த்தி சிதம்பரம் மற்றும் நிறுவனங்கள் இடை யிலான இமெயில் பரிமாற்றம் குறித்து சுமார் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ப.சிதம்பரத்துடன் நிதி அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் சிந்து குல்லர், இயக்குநர் பிரபோத் சக்சேனா ஆகியோரை அமர வைத்தும் விசாரணை நடத்தப் பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன