Published : 09 Sep 2019 08:07 PM
Last Updated : 09 Sep 2019 08:07 PM

காஷ்மீரிகளின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் கோரிக்கை 

ஜெனிவா, பிடிஐ

காஷ்மீர் மக்களின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் தலைவர் மிஷேல் பேச்சிலெட் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் அஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு சரிபார்ப்பு நடவடிக்கை மக்களை நாடற்றவர்களாக விட்டு விட வேண்டாம் என்பதை உறுதி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் கூறும்போது, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் இருபகுதிகளிலிருந்தும் தங்களுக்கு மனித உரிமைகள் குறித்த நிலவரங்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசின் சமீபத்திய நட்வடிக்கைகள் காஷ்மீரிகளின் உரிமைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து நான் ஆழமாக கவலையடைகிறேன். தகவல் தொடர்பு முடக்கம், அமைதியாக ஒன்று சேர்தல், உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கைது செய்தல் ஆகியவை குறித்த தகவல்களால் கவலை அடைந்துள்ளோம்” என்று அவர் மனித உரிஐ கவுன்சிலின் 42வடு அமர்வில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும் காக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தும் அதே வேளையில் தற்போதைய ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து இந்தியாவிடம் குறிப்பாக முறையிட்டுள்ளேன். அதாவது அடிப்படை சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்தல், கைது செய்யப்பட்டவர்களுக்கான அனைத்து உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் போன்றவற்றை இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார் அவர்.

என்.ஆர்.சி. விவகாரம்:

மேலும், அசாமில் நடத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து மிஷேல் பேச்சிலெட் கூறும்போது 1.9 மில்லியன் மக்கள் இறுதி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அசாமில் பெரிய நிச்சயமின்மையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் முறையீட்டு நடைமுரைகள் சரியாக நடைபெற இந்திய அரசுக்கு அவர் முறையிட்டுள்ளதோடு, அவர்களை நாடுகடத்துவதையும், முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுவதையும் தடுப்பதோடு நாடற்றவர்களாக அவர்கள் ஆவதிலிருந்து தடுக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x