Published : 09 Sep 2019 08:41 AM
Last Updated : 09 Sep 2019 08:41 AM

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 86,500 ரூபாய் அபராதம்

புவனேஸ்வர்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அளவில் அபராதங்கள் விதிக் கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் இருந்து சத்தீஸ்கரை நோக்கி சரக்கு லாரி ஒன்று கடந்த 3-ம் தேதி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரியை மறித்து சம்பல்பூர் பகுதி போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில், அந்த லாரியை ஓட்டுநர் உரிமம் பெறாத ஒருவர் ஓட்டியது தெரியவந்தது. மேலும், அந்த லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான எடையில் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல, ஏராளமான விதி முறை மீறல்களின் கீழ் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், அதிகாரிகளிடம் பல மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, அவருக்கான அபராதத்தை ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தினார்.

இந்நிலையில், இந்த தொகையை செலுத்தியதற்காக வழங்கப்பட்ட ரசீதின் புகைப்பட மானது, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, விதிக்கப்பட்ட அபராதங்களி லேயே இதுதான் மிகவும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x