

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு இன்று மாலை வெளியாக உள்ளது.
இப்போது முதல் முறையாக நேர்முக தேர்வு மற்றும் ஆளுமை தேர்வு முடிந்த 4 நாட்களில் இறுதி முடிவுகள் வெளியாகின்றன.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இதில் தேர்வாகிறவர்கள் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளை வகிப்பார்கள்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதற்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 4.51 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 933 பேர் முதன்மை தேர்வு தகுதி பெற்றனர்.
கடந்த ஆண்டு டிசம் பரில் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 286 பேர் தேர்வு பெற்றனர். இதில் இருந்து 3,308 பேர் ஆளுமை மற்றும் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.