செய்திப்பிரிவு

Published : 08 Sep 2019 19:32 pm

Updated : : 08 Sep 2019 19:45 pm

 

தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற தமிழிசை: மாநில புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம்

telangana
தெலங்கானா புதிய அமைச்சராக பதவியேற்ற கே.டி.ராமாராவ்

ஹைதராபாத்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் தெலங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


அவர் பதவியேற்ற இன்றைய தினமே உடனடியாக மாநில அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் தெலங்கானா புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார். 6 பேர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

Telanganaதெலங்கானா
Popular Articles

You May Like

More From This Category

More From this Author