Published : 08 Sep 2019 08:21 AM
Last Updated : 08 Sep 2019 08:21 AM

குடிநீர் திட்டங்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

அவுரங்காபாத்

குடிநீர் திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் அவுரங்கா பாத் நகரில் 10,000 ஏக்கர் பரப்பள வில் நாட்டின் முதல் பசுமை தொழில் நகர திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். அங்கு நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு மாநாட்டிலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

விடுதலைப் போராட்ட தலைவர் ராம் மனோகர் லோகியாவின் கனவை, நனவாக்க மத்திய அரசு தீவிரமாக உழைத்து வருகிறது. பெண்களுக்கு கழிப்பறை, சுத்த மான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று லோகியா வலியுறுத்தினார். இதற்காக தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் 2022-ம் ஆண்டில் ‘திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடு’ என்ற பெருமையை இந்தியா பெறும்.

குடிநீர் திட்டங்களை செயல் படுத்த மத்திய அமைச் சரவையில், ஜல் சக்தி என்ற புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படும். பிரதமர் அவாஸ் யோஜ்னா திட்டத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் இதுவரை 1.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியக் கடன் வழங்கப்படுகிறது. மேலும் முத்ரா திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முஸ்லிம் பெண்களின் உரிமை யைப் பாதுகாக்க முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x