பெண்களுக்கு டெல்லியில் இலவச மெட்ரோ சேவை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
புதுடெல்லி
டெல்லியில் பெண்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணம் செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த ஜூன் 3-ம் தேதி அறிவித் தார்.
இந்த திட்டம் 3 மாதங்களில் நடைமுறைக்கு வரும், இதற்கான மானியச் செலவை டெல்லி அரசு ஏற்கும் என்று கேஜ்ரிவால் கூறி னார். இந்நிலையில் கேஜ்ரிவால் அறிவிப்புக்கு எதிராக எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, டெல்லி மெட்ரோவின் 4-வது கட்டப் பணிகளை கண்காணித்து வரும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “டெல்லி அரசின் திட்டத்தால் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்படும். இதனால் மெட்ரோ விரிவாக்கப் பணி, பராமரிப்பு, பயணிகளுக்கு அளிக்கும் வசதிகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும்.
பொது மக்களின் பணத்தை டெல்லி அரசு மிகுந்த கவனத்துடன் செலவிட வேண்டும். மக்களுக்கு இலவசங்கள் அளிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மேலும் டெல்லி மெட்ரோவின் 4-வது கட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த டெல்லி அரசுக்கு ரூ.600 கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
