

பூஞ்ச்,
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகிறது. கடந்த வாரம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை ) காலை ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் எல்லையில் பாகிஸ்தான் 2000 வீரர்களைக் குவித்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
- ஏஎன்ஐ