Published : 07 Sep 2019 09:03 AM
Last Updated : 07 Sep 2019 09:03 AM

கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய தமிழர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் தென் கன்னட மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தமிழர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சசி காந்த் செந்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த யூபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தை யும், தேசிய அளவில் 9-வது இடத் தையும் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். கர்நாடகாவின் பெல்லாரி யில் உதவி ஆட்சியராக பொறுப் பேற்ற இவர், 2012-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.

பின்னர் ஷிமோகா மாவட்ட பஞ்சாயத்து, தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். அதன் பின் 2016-ம் ஆண்டு சுரங்க துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தென் கன்னட மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக சுறுசுறுப்புட னும், நேர்மையுடனும் பணியாற்றிய தால் மக்கள் மத்தியிலும் அதிகாரி கள் மத்தியிலும் நற்பெயரை பெற்றார்.

அண்மையில் மங்களூரு அருகே தற்கொலை செய்துகொண்ட காபி டே நிறுவன உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் மீட்புப் பணி யின்போது சசிகாந்த் செந்தில் செயல்பட்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று திடீரென தனது மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.

இவரது இந்த முடிவுக்கு மத் திய அரசின் அணுகுமுறையும், அண்மைக் கால நெருக்கடியும் தான் காரணம் என கூறப்படுகிறது. அதேபோல தற்போது கர்நாடகா வில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக முதல்வர் எடியூரப்பா கடந்த ஒரு மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகளை இடமாற்றம் செய்துள் ளார். இதன் காரணமாகவும் சசிகாந்த் செந்தில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகாந்த் செந்தில் விடுத்துள்ள அறிக்கையில், "எனது சொந்த விருப்பத்தின் பேரில் எனது பதவியை ராஜினாமா செய்துள் ளேன். இதில் யாருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இத்தனை காலம் என்னுடன் அன்பாக பழகி, முழு ஒத்துழைப்பு வழங்கிய தென் கன்னட மாவட்ட மக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். எனது பணி யில் இருந்து பாதியில் விலகிய தற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. ஜனநாயகத்தின் அடிப் படை கட்டமைப்பின் மீது முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு தளர்வு ஏற்பட்டுள்ளது. சமரசங்கள் அதிகரித்துள்ள இந்த கால சூழ்நி லையில், நான் பொதுப் பணியில் இருப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. வருங்காலங்களில் நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படை தன்மைக்கு இன்னும் சிரமமான காலகட்டங்கள் வரக் கூடும் என நினைக்கிறேன். எனவே ஐஏஎஸ் பதவியிலிருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இனிமேலும் இந்த பணி வழக்கமான பணியாக இருக்காது, என்பதை உணர்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2-வது முறையாக அமைந்த பிறகு டையூ டாமன் செயலாளராக இருந்த தமிழ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜம்மு - காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை கண்டித்து இந்த முடிவை எடுத் ததாக தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பணியாற்றிய தமிழர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா செய்தார். தற்போது சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிகாரி கள் மத்தியிலும், மக்கள் மத்தி யிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x