

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் 17 வருடம் உறுப்பினராக இருந்து 2013-ல் வெளியேறியவர் நிதீஷ் குமார். அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டது அதன் காரணமானது.
பிறகு தன் முக்கிய எதிர்க்கட்சி யான ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தலைவரான லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து பிஹாரில் மெகா கூட்டணி அமைத் திருந்தார். பின்னர், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிஹாரின் முதல் அமைச்சரானார்.
ஆனால், ஜூன் 2017-ல் லாலு கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக மெகா கூட்டணியில் இருந்து விலகியதால் பழைய நிலை திரும்பியது. அடுத்த 14 மணி நேரத்தில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து முதல்வராகி தன் ஆட்சியை தொடர்கிறார் நிதிஷ்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின் நிதிஷ்குமாரின் நடவடிக்கைகள் அம்மாநில அரசியல் கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில், ஜேடியூவின் தலைவ ரான நிதிஷ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபடி அதற்கு தலைமை வகிக்கும் பாஜகவின் திட்டங்களை எதிர்த்து வருகிறார். முஸ்லிம்களின் முத்தலாக் மீதான தடை சட்டம் மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயங் களில் பாஜகவிடம் இருந்து நிதீஷ் விலகி நிற்கிறார். அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக வும் நிதிஷ் கட்சி பேசி வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஜேடியு கட்சி நிர்வாகி கள் வட்டாரம் கூறும்போது, ‘லாலு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரது இளைய மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கட்சியை கட்டிக் காப்பதில் சுணக்கம் காட்டுகிறார். எனவே, அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, இத்தேர்தலில் பாஜகவும் தனித்தே போட்டியிட விரும்புகிறது.
இதில், உ.பி.க்கு அடுத்த எண் ணிக்கையில் அதிகமாக முஸ்லிம் கள் 17 சதவிகிதம் இருப்பது காரணம் ஆகும். இவர்கள் வாக்கு நிதிஷ் மற்றும் லாலுவிற்கு இடையே பிரிவதும் பாஜகவிற்கு சாதகமாக அமையும்.
எனவே, நிதிஷின் கட்சி தனித்து போட்டியிட்டு முன் னேறினால் அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மீண்டும் தேசிய அரசியலில் நுழைய முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.