Published : 07 Sep 2019 08:50 AM
Last Updated : 07 Sep 2019 08:50 AM

ம.பி. அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு எதிரொலி: காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுக்கத்தை உறுதிபடுத்துங்கள்- சோனியா, கமல்நாத்துக்கு திக்விஜய் சிங் வலியுறுத்தல்

போபால் 

‘காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுக் கத்தை உறுதிபடுத்தும் பொறுப்பை, ம.பி. முதல்வர் கமல்நாத் மற்றும் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் விட்டுவிடு கிறேன்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கோப மாகக் கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. முதல் வராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் பதவி வகிக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவரும் ம.பி. முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் மீது, மாநில வனத் துறை அமைச்சர் உமங் சிங்கார், சமீபத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

‘‘மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியை திக் விஜய் சிங் மிரட்டி வருகிறார். ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயரை ஏற் படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவித்து வருகிறார். உங்கள் கொள்கைக்கு ஆபத்து வரும் போது, அதை எதிர்த்து போராட வேண்டும். வாய்மையே வெல்லும்’’ என்று உமங் சிங்கார் கூறினார். மேலும், உமங் சிங்கார் அளித்த அழுத்தத்தால், சுங்க வரித் துறை அதிகாரி சஞ்சீவ் துபேவை முதல்வர் கமல்நாத் பணியிட மாற்றம் செய்தார். திக் விஜய் சிங்குக்கு அதிகாரி துபே மிகவும் நெருக்கமானவர் என்று சிங்கார் கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுபான ஊழல் தொடர்பாக அமைச்சர் சிங்கார் உட்பட மாநில அமைச்சர் களுக்கு லஞ்சம் வழங்கப்படுவது தொடர்பாக வேறு ஒரு அதிகாரி யுடன் சஞ்சீவ் துபே பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வைர லானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ம.பி. காங்கிரஸ் தலைவர் களுக்குள் மோதல் அதிகரித்துள்ள நிலையில், திக் விஜய் நேற்று தனது மவுனத்தைக் கலைத்தார். அவர் கூறும்போது, ‘‘எதிர்கால நடவடிக்கைகளை முதல்வர் கமல்நாத் மற்றும் சோனியாவிடம் விட்டுவிடுகிறேன். ஒவ்வொரு கட்சியிலும் ஒழுக்கம் கடைபிடிக் கப்பட வேண்டும். ஒழுக்கத்தை ஒருவர் மீறினால், அவர் யாராக இருந்தாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் உமர் சிங்கார் - திக் விஜய் சிங் இடையே நடக்கும் மோதலை தீர்த்து வைக்க முதல்வர் கமல்நாத் முயற்சிகள் மேற்கொண்டார். டெல்லி சென்று சோனியா காந்தியிடமும் ஆலோசனை நடத்தினார். எனினும், காங்கிரஸில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x