கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியேற்பு

கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியேற்பு
Updated on
1 min read

திருவனந்தபுரம்

கேரள ஆளுநராக அறிவிக்கப்பட்ட ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரள ஆளுநராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்துக்குப் பதிலாக ஆரிப் முகமது கான் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஆரிப் முகமது கான். உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் ஷா பானு வழக்கில், ராஜீவ் காந்தி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, கடைசியாக பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாறி ஆரிப் கான் 2007-ம் ஆண்டுக்குப் பின் எந்தக் கட்சியும் சாராமல் செயல்பட்டு வந்தார்.

அவர் இன்று முறைப்படி கேரள ஆளுநராக பொறுப்பேற்றார். கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிரிஷிகேஷ் ராய் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் மலைாளத்திலும், பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பதவியேற்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டார். விழாவில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதுபோலவே பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று திருவனந்தபுரம் வந்தபோது அவரை மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் முதல்வர் பினராயி விஜயன் வரவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in