

விளாடிவாஸ்டாக்
மும்பையைச் சேர்ந்தவர் மதப் பிரச்சாரகர் ஜாகீர் நாயக் (53). ‘பீஸ் டிவி’யைத் தொடங்கி அதில் உரையாற்றி வந்தார்.
இந்நிலையில், இவரது பேச்சால் தூண்டப்பட்டு சிலர் தீவிரவாதப் பாதைக்கு சென்றதாக புகார் எழுந் தது. அத்துடன், கடந்த 2016-ம் ஆண்டு தாகாவில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதலில், ஜாகீர் நாயக் கின் பெயரும் அடிபட்டது. இந்நிலை யில், தீவிரவாதம் தொடர்பாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனால் அவரை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையில், அவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி மலேசியாவில் தஞ்சம் அடைந்தார். அப்போது இருந்த மலேசிய அரசு, ஜாகீர் நாயக் நிரந்தரமாக தங்க அனுமதி அளித்தது. ஆனால், பொது நிகழ்ச்சி களில் பேசுவதற்குத் தடை விதித்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மற்றும் இந்திய - ரஷ்ய 20-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இவற் றில் பிரதமர் நரேந்திர மோடி பங் கேற்றார். மாநாட்டின் இடையில் மலேசிய பிரதமர் மகாதிர் முக மதுவை (94), மோடி நேற்று சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை செயலர் விஜய் கோகலே நேற்று கூறியதாவது:
சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் ஜாகீர் நாயக்கை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் மகாதிர் முகமது விடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதற்கு, இரு நாட்டு அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இதுகுறித்து முடிவெடுக்கலாம் என்று மகாதிர் உறுதி அளித்தார்.
மேலும், தீவிரவாதத்தால் ஏற் படும் பாதிப்புகள் குறித்தும், காஷ் மீர் மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காகவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் மலேசிய பிரதமரிடம் மோடி எடுத்துரைத்தார். அதற்கு, தீவிரவாதம் எந்த வகையில் இருந் தாலும் அதை தாம் கண்டிப்ப தாக அவர் கூறினார். மேலும், தீவிர வாத தடுப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவ தற்கு மகாதிர் உறுதியளித்தார்.
இவ்வாறு விஜய் கோகலே கூறினார்.