Published : 06 Sep 2019 07:47 AM
Last Updated : 06 Sep 2019 07:47 AM

டெல்லி திஹார் சிறையில் அன்று மகன்.. இன்று தந்தை... 

புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கடந்த 2018 பிப்ரவரியில் சிபிஐ கைது செய்தது. 12 நாட்கள் அவர் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். பின்னர் டெல்லி திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தனி அறை, தனி கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கார்த்தி சிதம்பரம் கோரினார். அவரின் கோரிக்கைகளை நீதிபதி சுனில் ராணா நிராகரித்துவிட்டார்.

“திஹார் சிறையில் கார்த்தி சிதம்பரம் தனி அறை, தனி கழிப் பறை, புத்தகம் பயன்படுத்த அனு மதிக்க முடியாது. மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மருந்து, மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்” என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திஹார் சிறையில் சாதாரண கைதியை போன்றே கார்த்தி சிதம்பரம் நடத்தப்பட்டார். 23 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு அவர் ஜாமீ னில் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் நேற்று திஹார் சிறையில் அடைக்கப்பட் டார். அவரது கோரிக்கையை ஏற்று சில சலுகைகளுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

“இசட் பிரிவு பாதுகாப்பில் ப.சிதம்பரம் இருப்பதால் திஹார் சிறையில் அவருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். அந்த அறை யில் மேற்கத்திய பாணி கழிவறை வசதி இருக்க வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மருந்து, மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லலாம்” என்று நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார். திஹார் சிறையில் பின்பற்றப் படும் நடைமுறைகள் குறித்து சிறை வட்டாரங்கள் கூறியதாவது:

சிறை விதிகளின்படி ப.சிதம்பரத்துக்கு மருத்துவப் பரி சோதனை நடத்தப்படும். விசா ரணை கைதிகள் தரையில்தான் படுக்க வேண்டும். எனினும் ப.சிதம் பரம் மூத்த குடிமகன் என்பதால் அவருக்கு மரக்கட்டில் வழங்கப் படும்.

சிறைக் கைதிகள் காலை 6 முதல் 7 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். சிறையில் தயார் செய் யப்படும் உணவையே சாப்பிட வேண்டும். காலை உணவாக ரொட்டி, டீ, பிஸ்கட் வழங்கப்படும்.

பிற்பகல் 1 மணிக்கு மதிய உணவு வழங்கப்படும். 4 அல்லது 5 சப்பாத்தி, ஒரு காய்கறி பொரி யல், பருப்பு கூட்டு ஆகியவை வழங்கப்படும். இரவு 8 மணிக்கு இதே வகையான உணவு வழங்கப் படும். ப.சிதம்பரம் தென்னிந்திய உணவு வகைகளை விரும்பினால், சிறை கேன்டீனில் சிறப்பு உணவு வகைகளை கேட்டுப் பெற முடியும். அவரது குடும்பத்தினர் வழங்கும் ஆடைகளை அவர் அணி யலாம். இவ்வாறு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ப.சிதம்பரத்தின் விருப்பம்

கடந்த 3-ம் தேதி ஐ.என்.எக்ஸ். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது “சிதம்பரத்திடம் விசாரணை முடிந்துவிட்டது. அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என்று சிபிஐ கோரியது. சிதம்பரம் தரப்பில் சிபிஐ காவலை நீட்டிக்கக் கோரியதால் செப்டம்பர் 5-ம் தேதி வரை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்தபோது, டெல்லியில் உள்ள சிபிஐ விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவர் தங்கிய அறையில் தொலைக்காட்சி பெட்டி, இரட்டை படுக்கை வசதி, குளியல்- கழிவறை. குளிர்சாதன வசதி இருந்தன. அமலாக்கத் துறை காவலிலும் இதே வசதிகளை சிதம்பரம் பெற முடியும். அதனால்தான் சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணையில், அமலாக்கத் துறையிடம் சரணடைய ப.சிதம்பரம் விருப்பம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x