Published : 05 Sep 2019 08:52 AM
Last Updated : 05 Sep 2019 08:52 AM

மக்கள் தொடர்பு பணியில் தனியார் நிறுவனங்கள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

மத்திய அமைச்சகங்களின் துறை ரீதியான மக்கள் தொடர்பு பணி களுக்கு தனியார் நிறுவனங்கள் அமர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையும் மக்கள் தொடர்பு பணியில் தனியாரை அமர்த்த திட்டமிட்டு வருகிறது.

மத்திய அரசின் துறைகளில் முக்கியமானதாக இருப்பது தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம். இத்துறையில் ஐ.ஐ.எஸ். எனும் இந்திய தகவல் பணிக்கு தேர்ந் தெடுக்கப்படும் குடிமைப் பணி அதிகாரிகள் அனைவரும் பணி அமர்த்தப்படுகின்றனர்.

இவர்களின் நிர்வாகத்தில் செயல்படும் தகவல் ஒலிபரப்புத் துறை, மத்திய அமைச்சகங்கள் அனைத்திற்கும் அரசு விழாக்கள் மற்றும் செய்தியாளர் கூட்டம் நடத்து தல், செய்தி மற்றும் விளம்பரங் களை வெளியிடுதல் உள்ளிட்ட மக்கள் தொடர்பு பணி செய்து வருகிறது.

இதற்காக நாடு முழுவதிலும் பிஐபி எனப்படும் மத்திய அரசின் 36 பத்திரிகை தொடர்பு அலுவல கங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தகவல் ஒலிபரப் புத் துறையின் சில குறிப்பிட்ட பணிகளை தனியார் விளம்பர நிறுவனங்களும் செய்ய தொடங்கி யுள்ளன.

இதனை, பிரதமர் நரேந்திர மோடியின் முதலாம் ஆட்சிக்காலத் தில் மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் பயன்படுத்த துவங்கினார். மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் அமைச்சராக இருந்தவர், பிரபல சர்வதேச விளம்பர நிறுவனம் ஒன்றை இப்பணிக்காக அமர்த்தி இருந்தார்.

இதற்கான செலவுகளை தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் நிதியை அவர் பயன்படுத்தினார். பிறகு அவர் கூடுதல் பொறுப்பேற்ற நிலக்கரி மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றுக்கும் இதே பாணி யில் தனியார் நிறுவனத்தின் பலனை பெற்றிருந்தார். இந்த வகை பணியில் ரயில்துறை அமைச் சகத்தின் 18 மண்டல அலுவலகங் களில் மக்கள் தொடர்பு அலுவலர் கள் உள்ளனர்.

எனினும், இவர்களுடன் அந்த தனியார் நிறுவனம் சில பணிகளை கூடுதலாகச் செய்தது. இதன் பலன் காரணமாக, அடுத்து அமைந்த ஆட்சியிலும் இந்த முறையை அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து வருகிறார். இதே முறை யில், மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரியும் ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தின் பணியை பயன்படுத்தி வருகிறார். இது, கட்கரியின் மற்றொரு அமைச் சகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கும் பணியாற்றி வருகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சக அதிகாரி கள் வட்டாரங்கள் கூறும்போது, ‘இதனால், எங்களுக்கு சுமை குறைவு என்றாலும் இந்த செயலால் நம் திறமை குறைவாக மதிப்பிடப் படுவதாகக் கருதுகிறோம். அதே சமயம், தனியார் நிறுவனங்கள் மூலம் தனது அரசியல் முன்னேற் றத்திற்கான பணிகளையும் அமைச் சர்கள் செய்து கொள்கின்றனர். இதற்காக செய்யும் செலவை எங்கள் துறைக்கு செலவிட்டால் கூடுதல் அலுவலர்களை அமர்த்தி நவீன தொழில்நுட்பங்களுடன் அனைத்து அமைச்சகங்களுக்கும் அதன் பலனை அளிக்க முடியும்.’ எனத் தெரிவித்தன.

இதனிடையே, தனியார் நிறு வனங்களின் பணியை தகவல் ஒலிபரப்புத் துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

இவர், சமூகவலைதளக் கணக்கு கள் நிர்வாகம் உள்ளிட்ட சில குறிப் பிட்ட பணிகளில் மட்டும் தனியாரை பயன்படுத்த திட்டமிட்டு வருவ தாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x