Published : 05 Sep 2019 08:46 AM
Last Updated : 05 Sep 2019 08:46 AM

கர்தார்பூர் குருத்வாராவுக்கு விசா இன்றி பயணம்: இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல்

புதுடெல்லி

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ், தனது வாழ்நாளில் 18 ஆண்டுகளை பாகிஸ்தானின் தற்போதைய நரோவால் மாவட்டத் தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு ‘தர்பார் சாஹிப்’ என்ற குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் உள்ள இந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனிதப் பயணம் சென்று வருகின்றனர். இதுபோல் பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவுக்கு பாகிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் வருகின்றனர்.

இவ்விரு குருத்வாராக்களையும் இணைக்கும் வகையில் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் இந்த வழித் தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடைமுறைகளை வகுப் பதற்கான 3-வது சுற்று பேச்சு வார்த்தை அமிர்தசரஸ் மாவட்டம், அட்டாரியில் நேற்று நடைபெற்றது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறிய தாவது:

கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்தி இந்திய யாத்ரீகர்கள் விசா மற்றும் எவ்வித கட்டுப்பாடு களும் இன்றி பயணம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர் அடையாள அட்டை (ஓசிஐ) வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினரும் கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் யாத்ரீகர்களை அனுமதிக்கவும் விசேஷ நாள்களில், பாகிஸ்தான் ஏற்படுத்தும் வசதிகளுக்கு ஏற்பட கூடுதல் யாத்ரீகர்களை அனுமதிக்க வும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றவரை கூடுதல் யாத்ரீகர் களை அனுமதிக்க முயற்சி செய் வதாக பாகிஸ்தான் உறுதி கூறி யுள்ளது.

கர்தார்பூர் வழித்தடத்தில் ஆண்டு முழுவதும் யாத்ரீகர்களை அனுமதிக்கவும் அவர்களை தனி யாகவோ அல்லது குழுவாகவோ அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனுமதிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கர்தார்பூர் குருத்வாராவுக்கு யாத்ரீகர்களை அனுமதிப்பதற்காக சேவைக் கட்டணம் நிர்ணயிக்க பாகிஸ்தான் விரும்பியது. ஆனால் இந்தியா இதை ஏற்கவில்லை. இதுபோல் குருத்வாரா வளாகத்தில் இந்திய அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரியுள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x