பாகிஸ்தான் அரசின் உதவியுடன் காஷ்மீரில் தாக்குதல் நடத்த அனுப்பினார்கள்: பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதிகள் வாக்குமூலத்தால் பரபரப்பு

பாகிஸ்தான் அரசின் உதவியுடன் காஷ்மீரில் தாக்குதல் நடத்த அனுப்பினார்கள்: பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதிகள் வாக்குமூலத்தால் பரபரப்பு
Updated on
2 min read

ஸ்ரீநகர்

காஷ்மீரில் பயங்கர தாக்குதலை நடத்தும் நோக்கில், பாகிஸ்தான் அரசு தங்களை அனுப்பி வைத்த தாக ராணுவத்திடம் பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்ப வத்துக்கு பதிலடியாக, பாகிஸ் தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதி கள் இறந்ததாக தகவல்கள் வெளி யாகின.

இதன் தொடர்ச்சியாக, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற் றம் நீடித்து வந்தது. மேலும், இந்திய எல்லைக்குள் ஊடுருவும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதி கள் ஈடுபட்டு வந்தனர். ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படை யும் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கைகள் காரணமாக, அந்த முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, காஷ்மீரில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டன. இதில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் இன்றைய தேதி வரை 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் வாக்குமூலம்

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு, சந்தேகப்படும்படியாக திரிந்த 2 பேரை ராணுவத்தினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இருவரும் பாகிஸ் தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த வர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை காவலில் எடுத்து ராணுவம் விசா ரணை மேற்கொண்டது. அப்போது, தாங்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், காஷ்மீரில் பயங்கர தாக்கு தலை நடத்துவதற்காக பாகிஸ் தான் அரசின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த தகவலை, ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு துணைத் தளபதி கே.ஜே.எஸ். தில்லான், நகரில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். மேலும், அந்த தீவிரவாதிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கை களை பாகிஸ்தான் தூண்டி வரு வதற்கு இதை விட சிறந்த சான்று இருக்க முடியாது. கடந்த மாதம் 5-ம் தேதி (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தினம்) முதலாக, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. ஆனால், அவற்றை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்து வருகிறது" என்றார்.

இளைஞர் பலி

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த மாதம் சவுரா பகுதியில் நடந்த போராட்டத்தின் போது,பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அவர்களை தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர். இதில், சவுரா பகுதியைச் சேர்ந்த அஸ்ரர் அகமது கான் (18) என்பவர் படுகாயமடைந்தார். இந்நிலையில், நகரில் உள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழந்த தகவல் வேகமாக பரவியதால், நகரில் பதற்றமான சூழல் நிலவியது. எனவே, அசம்பாவிதத்தை தவிர்ப் பதற்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகக் குழு இன்று பயணம்

காஷ்மீர் வளர்ச்சிக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து ஆய்வு செய்வதற் காக அங்கு மத்திய வட கிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச் சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in