Published : 04 Sep 2019 09:04 PM
Last Updated : 04 Sep 2019 09:04 PM

‘உண்மையான இந்தியக் குடிமக்கள் நீக்கமா?’- அஸாம் என்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் மீது இரண்டு  எஃப்.ஐ.ஆர்.

குவஹாத்தி,

அஸாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளரான பிரதீக் ஹஜேலா மீது குவஹாத்தி மற்றும் திபுருகார் ஆகியவற்றில் முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

என்.ஆர்.சி. இறுதிப் பட்டியலை அறிவித்த பிரதீக் ஹஜேலா வேண்டுமென்றே உண்மையான இந்தியக் குடிமக்களை பட்டியலிலிருந்து நீக்கியதாக முஸ்லிம் அமைப்பான அசோம் கரியா-மரியா யுவச் சத்ர பரிஷத் மற்றும் அனைத்திந்திய சட்ட உதவி அமைப்பின் ஒரு உறுப்பினர் ஒருவரும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

இதில் முதல் புகார் செப்.3ம் தேதி மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அசோம் கரியா-மரியா யுவச்சத்ர பரிஷத் குவஹாத்தி லடசில் காவல்நிலையத்தில் இந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. இந்த அமைப்பு பூர்வக்குடி அசாமிய முஸ்லிம்களான கரியா மற்றும் மரியா பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கிறது.

“இறுதி என்.ஆர்.சி. என்பது கேலிக்கூத்து, காலவிரயம் மற்றும் மனிதவளங்களை விரயம் செய்ததாகும். இது முழுக்க முழுக்க ஒழுங்கற்ற முறையில் உள்ளது, ஒரே குடும்பத்தில் 3 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருவர் நீக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படை வீரர் நீக்கப்பட்டுள்ளார், ஒரு மகன் பட்டியலில் சேர்க்கப்பட இன்னொரு வாரிசு நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அதே குடும்ப தரவுதான். இது குறைந்தது மாநிலத்தின் பூர்வக்குடியினருக்கு இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது” என்று இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹஜேலாவுக்கு எதிரான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகவே என்.ஆர்.சி நடைமுறை ஒட்டுமொத்தத்தையும் அரசு விசாரிக்கட்டும், என்கிறார் அந்தச் செய்தித் தொடர்பாளர்.

இந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டார் போலீஸ் ஆய்வாளர் உபென் கலிதா. ‘புகார் என்னவெனில் நிறைய மக்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதே’ என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து செப்.4ம் தேதி அசாமின் திப்ருகர் டவுனில் அனைத்திந்திய சட்ட உதவி அமைப்பின் உறுப்பினர் சந்திரா மஜூம்தார், என்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் ஹஜேலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் இன்னொரு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார். அதாவது ஹஜேலா வேண்டுமென்றே மஜூம்தார் குடும்பத்தினரையும் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது இவரது புகார்.

“நான் இந்தியக் குடிமகன், என்னுடைய பெற்றோர் 1947- திப்ருகரில் செட்டில் ஆகினர். என்று கூறும் மஜூம்தார் 1951 என்.ஆர்.சி.யை தன் எஃப்.ஐ.ஆர்.உடன் சேர்த்துள்ளார்.

பிற அமைப்புகளும் ஹஜேலாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அனைத்து அஸாம் பெங்காலி யுவ சத்ரா பரிஷத் தலைவர் ஸ்வபன் குமார் மண்டல் கூறும்போது, “என்.ஆர்.சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் 90%க்கும் அதிகமானோர் இந்துக்கள்” என்கிறார் இவர்.

இவர்கள் தவிர முஸ்லிம் கல்யாண் பரிஷத் அமைப்பும் என்.ஆர்.சி.யை மறு சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

-சிறப்புச் செய்தியாளர், தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x