

பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேச வேண்டாம் என்றும் அவர் தனது எல்லையை மீறக்கூடாது என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி முதல்வராக சிறப்பாக செயல்பட முடியாத கேஜ்ரிவால், தனது தோல்வியை மறைப்பதற்காக மோடியின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு பிரச்சினையிலும் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டு வதன் மூலம் கேஜ்ரிவால் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத் துக்குட்பட்டு அவரால் செயல்பட முடியாது. தனது பழைய முயற்சி களை புதிது போல மக்களிடம் காட்டிக்கொள்வதைத் தவிர அவரிடம் உறுதியான நடவடிக்கை கள் எதுவும் இல்லை.
டெல்லியின் ஆனந்த் பிரபாத் பகுதியில் 19 வயது பெண் இறந்த விவகாரத்தில் கேஜ்ரிவால் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். இதற் காகவே இதுபோன்று பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறார்” என்றார்.
ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, விளம்பரம் மூலம் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள திறந்த கடிதம் குறித்து பாஜக டெல்லி பொறுப்பாளர் ஷ்யாம் ஜஜு கூறும்போது, “பிரதமருக்கு எதிராக ஒரு மாநில முதல்வர் இதுபோன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதன் முறை. அதுவும் அரசின் பணம் இதற் காக செலவிடப்பட்டுள்ளது. பிரதம ருக்கு அறிவுரை சொல்வதற்கு கேஜ்ரிவாலுக்கு தகுதி இல்லை. அவர் தனது எல்லையை மீறி செயல் படக் கூடாது” என்றார்.