Published : 04 Sep 2019 09:53 AM
Last Updated : 04 Sep 2019 09:53 AM

பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்: விளாடிவாஸ்டாக் - சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டம்

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட் கள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார். இந்த பயணத்தின் போது ரஷ்யாவின் விளாடிவாஸ் டாக்- சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார பேரவையின் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயண மாக டெல்லியில் இருந்து இன்று விளாடிவாஸ்டாக் நகருக்கு புறப் படுகிறார். அதே நகரில் இந்தியா, ரஷ்யா 20-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதிலும் அவர் பங்கேற்கிறார்.

ரஷ்ய பயணத்தின்போது அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகி றார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஈரானுடன் எந்த நாடும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா வில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்கு மதி செய்கிறது.

தற்போது ரஷ்யாவின் பீட்டர் ஸ்பர்க் நகரில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல்களில் கச்சா எண் ணெய், இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு கப்பல்கள் மும்பை வந்தடைய 40 நாட்கள் தேவைப் படுகிறது. அமெரிக்கா, ஈரான் இடையே எழுந்துள்ள பதற்றம் காரணமாக இந்த கடல் வழித் தடத்தில் சரக்கு கப்பல் போக்கு வரத்து சவாலாகி உள்ளது.

எனவே பீட்டர்ஸ்பர்க்-மும் பைக்கு மாற்றாக ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக்- சென்னை இடை யேயான புதிய வழித்தடத்தில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் விளாடிவாஸ் டாக் நகரில் இருந்து 19 நாட்களில் சரக்கு கப்பல்கள் சென்னை வந் தடையும். பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பின் போது விளாடிவாஸ்டாக்-சென்னை இடையிலான சரக்கு போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x