Published : 04 Sep 2019 08:03 AM
Last Updated : 04 Sep 2019 08:03 AM

8 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் விமானப்படையிடம் ஒப்படைப்பு

பதான்கோட்

எட்டு அப்பாச்சி ரக ஹெலிகாப் டர்கள் இந்திய விமானப்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

அமெரிக்க நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த 22 ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி கடந்த ஜூலை 27-ம் தேதி 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக் கப்பட்டன. இதைத் தொடர்ந்து மேலும் 4 ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம், இந்திய விமானப் படையிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில் நேற்று மேலும் 8 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி பஞ்சாப் மாநிலம் பதான் கோட் விமானப்படை தளத்தில் நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவில், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். ஹெலிகாப்டர்களுக்கு வாட்டர் சல்யூட் கொடுத்து வரவேற்பு அளிக் கப்பட்டது.

2020-ம் ஆண்டுக்குள், 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களையும் விமானப்படையில் சேர்க்க திட்ட மிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், இந்திய விமானப் படைக்குஅப்பாச்சி ஹெலிகாப்டர் வருகை முக்கியத்துவம் பெறு கிறது.

சிறப்பம்சம்

அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் குறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

எந்தவொரு மோசமான வானி லையிலும் சிறப்பாகச் செயல்படக் கூடியது இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். ஒரே நேரத்தில் பல்முனைத் தாக்குதலில் ஈடுபட இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும்

அப்பாச்சி ஹெலிகாப்டரில் பறக்க 2 விமானிகள் இருப்பது அவசியமாகும். இதன் உயரம் 60 அடி, அகலம் 50 அடி. ஹெலிகாப்டரை இயக்க 2 இன்ஜின்கள் உள்ளன,

உலகின் மிக நவீன போர் ஹெலிகாப்டர்களில் ஒன்றாக இது உள்ளது. இது அமெரிக்க ராணுவத்தால் தற்போதும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் இந்த ஹெலிகாப்டரை இராக், ராணுவத்துடன் சண்டையிடவும், ஆப்கானிஸ்தான் மலைகளில் மறைந்திருந்த தலிபான்கள் தீவிர வாதிகளை அழிக்கவும் பயன் படுத்தினர்.

மணிக்கு 280 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியவை. ரேடார்கள் களின் கண்களில் இருந்து எளிதில் இவை தப்பிக்கும். தொடர்ச்சியாக, சுமார் மூன்றரை மணி நேரம் பறந்து தாக்குதலை தொடுக்க வல்லது. இந்த ஹெலிகாப்டரில் உள்ள ஹெலிஃபையர் ஏவுகணை தொழில்நுட்பம் மூலமாக நள்ளிரவு வேளையிலும், 4 மைல் தொலைவில் உள்ள இலக்கையும் சரியாக தாக்க முடியும். இது மட்டுமல்லாமல், இந்த ஹெலிகாப்டரில் 30 எம்எம் எம்230இ1 செயின் துப்பாக்கிகள் உள்ளன.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு இதுவரை 2,200 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கு வழங்கப்பட் டுள்ள அப்பாச்சி ஏஎச்-64இ ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் அதி நவீன போர் ஹெலிகாப்டர்களாகும். இந்த ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானிகள் கடந்த 2018 முதல் அமெரிக்காவுக்குச் சென்று இயக்கி பயிற்சி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x