‘மருமகன்’ முதல் குவாத்ரோச்சி வரை அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பதிலடி

‘மருமகன்’ முதல் குவாத்ரோச்சி வரை அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பதிலடி
Updated on
2 min read

காங்கிரஸ் ஆளும் மாநில ஊழல் கள் மட்டுமல்லாமல் ‘மருமகன்’ முதல் குவாத்ரோச்சி வரையிலான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

நடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. இதில், லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழலில் சிக்கிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இவர்கள் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை செயல்பட விடமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விவாதிக்கக் கோரி பாஜக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத் துள்ளனர். எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை” என்றார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

மருமகன் (சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில பேரம்) முதல் குவாத்ரோச்சி (போபர்ஸ் ஊழல்) விவகாரம் வரையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

மேலும் கேரளாவில் நடை பெற்ற மாட்டுத் தீவன ஊழல், கோவாவின் நீர் விநியோக திட்ட ஊழல், உத்தராகண்ட் வெள்ள நிவாரண ஊழல், இமாச்சலப் பிரதேசத்தின் உருக்கு ஊழல் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவா திக்க அரசு தயாராக உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரை நடத்த விடாமல் காங்கிரஸ் கட்சி அமளி யில் ஈடுபடுவதால் முக்கியமான மசோதாக்கள் நிறைவேறுவது தாமதமாகிறது. இந்த மசோதாக் கள் எல்லாம் பாஜகவின் நலனுக் கானது அல்ல. நாட்டு மக்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்கானது ஆகும். இவ்வாறு நக்வி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு 5.6 அங்குலமாகக் குறைந்துவிடும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “இது பொருத்தமற்றது. தங்கள் கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது ஏன் என்பது பற்றி காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்” என்றார்.

அரசு ஒரு அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ராகுல் காந்தி கூறி யிருந்தார். இதுகுறித்து நாயுடு கூறும்போது, “அவர் இவ்வாறு கூறியிருப்பதற்கு, நாடு வளர்ச்சி அடைவதை அனுமதிக்க முடியாது என்பதுதுான் பொருள். இதை ஏற் றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதற்கிடையே, லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆனந்த் சர்மா நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in