அஜித் ஜோகியின் மகன் கைது: மோசடி வழக்கில் நடவடிக்கை

அமித் ஜோகி
அமித் ஜோகி
Updated on
1 min read

ராய்ப்பூர்
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்த புகாரின் கீழ் சந்திஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 2000 ஆண்டில் சத்தீஸ்கர் உருவானதை தொடர்ந்து 2003 வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தவர் அஜித் ஜோகி. கடந்த 2016-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய இவர் ‘ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னை பழங்குடியினத்தின் ‘கன் வார்’ சமூகத்தவராக கூறிவரும் ஜோகி, தற்போது பழங்குடி யினருக்கு ஒதுக்கப்பட்ட மார்வாகி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஜோகியின் சாதிச் சான் றிதழை கடந்த வாரம் ரத்து செய்தது. மேலும் பிலாஸ்பூர் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க பரிந் துரை செய்தது. இதையடுத்து மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பொய் சாதிச் சான்றிதழ் பெற்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகியும் தேர்தல் மனுவில் தவறான தகவல்களை தந்ததாக கூறி இன்று கைது செய்யப்பட்டார்.
2013ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கடந்த பிப்ரவரி மாதம் மோசடி புகார் அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில்,
2013 சட்டப்பேரவைத் தேர்தலில் மர்வாகி தொகுதியில் போட்டியிட்ட அமித் ஜோகி, வேட்பு மனுவில் தனது பிறந்த ஊர் தொடர்பாக தவறான தகவலை அளித்ததாக அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சமீரா பைக்ரா புகார் அளித்தார்.
இந்த புகார் மீது கடந்த 6 மாத காலமாக விசாரணை நடத்திய போலீசார், இன்று அமித் ஜோகியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in