

புதுடெல்லி
அசாமில் என்ஆர்சி பட்டி யலில் விடுபட்டவர்கள், தங் களுக்கு சட்டப்படி இறுதித் தீர்வு கிடைக்கும்வரை அனைத்து உரிமைகளையும் அனுபவிக் கலாம் என மத்திய அரசு தெரிவித் துள்ளது.
அசாமில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளதாக புகார் உள்ளது. இதை யடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்திய குடியுரிமை பெற்றவர் களை அடையாளம் காண்பதற் காக தேசிய குடிமக்கள் பதி வேடு (என்ஆர்சி) தயாரிக்கப் பட்டு வந்தது. இதன் இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் வெளி யிடப்பட்டது. மொத்தம் 3.3 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 19 லட்சத்துக்கும் மேற் பட்டோரின் பெயர்கள் இப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் பட்டியலில் விடுபட்டவர் களின் நிலை கேள்விக்குறியானது.
இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறியதாவது:
அசாமில் வெளியிடப்பட்டுள்ள என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெறாத தனிநபர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு சட்டப்படி இறுதித் தீர்வு கிடைக்கும் வரை இப்போது பெற்று வரும் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
இப்பட்டியலில் விடுபட்டவர் கள் சட்டப்படி நாடற்றவராகவோ வெளிநாட்டவராகவோ கருதப்பட மாட்டார்கள். அவர்கள் இதற்கு முன்பு பெற்று வந்த எந்த உரிமையும் இப்போதைக்கு பறிபோகாது.
பரிசீலனை
என்ஆர்சி பட்டியலில் விடுபட்டவர்கள், இது தொடர்பான நோட்டீஸ் கிடைத்ததில் இருந்து 120 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை விரைவுபடுத்துவதற்காக, அசாம் அரசு கூடுதலாக 200 தீர்ப்பாயங்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் அமைக்கும். ஏற்கெனவே செயல்பட்டு வரும் 100 தீர்ப்பாயங்களும் இந்தப் பணியில் ஈடுபடும். விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகே அவற்றின் மீதான பரிசீலனை தொடங்கும்.
மேல்முறையீடு
என்ஆர்சி பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கக் கோரும் மேல் முறையீட்டு மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டால், அசாம் உயர் நீதிமன்றத்தை அணுக அவர்களுக்கு உரிமை உள்ளது. அங்கும் நிராகரிக்கப்பட்டால் இறுதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். மேல் முறையீடு தொடர்பான சட்ட உதவிகளை அரசு வழங்கும்.
என்ஆர்சி பட்டியல் தயாரிப்புப் பணி உச்ச நீதிமன்ற கண்காணிப் பின் கீழ் வெளிப்படைத் தன்மை யுடனும் சட்டத்துக்கு உட்பட்டும் நடைபெறுகிறது. இந்த விவ காரத்தில் உச்ச நீதிமன்ற உத்தர வைத்தான் அரசு செயல் படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ